பாலாவின் படம் என்றால் ரசிகர்களிடம் பெரிய எதிர்பார்ப்பு இருக்கும்.மிகவும் இயல்புடன் யதார்த்தமுடன் அமைந்திருக்கிற காட்சிகளைப் பார்த்து ரசிகர்கள் விழிகளை உயர்த்தினார்கள். அந்த காட்சிகளுக்காக நடிகர்களிடம் பாலா கடுமையாக நடந்து கொண்டதாக பத்திரிகைகள் பலவிதமாக எழுதின.
அவரை கொடுங்கோலன் என்பதாகவே சித்தரித்தன.
பாலாவின் இயல்பே அப்படித்தானோ என நெருங்கிப் பழகியவர்களும் நினைத்தார்கள்.
சீயான் விக்ரமின் மகன் துருவ் இவரது இயக்கத்தில்தான் நடிக்கவேண்டும் என்று விக்ரமும் தவம் இருந்து படத்தை எடுத்தனர்.
வர்மா திரைக்கு வரவே இல்லை.பாலாவுக்கு படம் எடுக்கத்தெரியவில்லை என்கிற பெரும் பழி சேர்ந்தது.
பாலாவின் இமேஜ் அங்கு விழுந்தது. இன்னும் எழவில்லை.
தன்னை நிலை நிறுத்த வேண்டும் என்கிற கட்டாயத்தில் இருக்கிறார் பாலா.
இதற்காக நடிகர் ஆர்யாவை அணுகி இருக்கிறார்.
ஆனால் பாலாவின் இயக்கத்தில் ஆர்யா நடிக்கும் மனப்பான்மையில் இல்லை என்கிறார்கள்.
பாலா நம்புகிறார்.ஆனால் அவரை ஆர்யா நம்புவதாக இல்லை.!
இதுதான் சினிமா!