தல அஜித்குமார் நடித்து வெளிவர தயாராக இருக்கிற படம் ‘ நேர் கொண்ட பார்வை’
எச்.வினோத் இயக்கியிருக்கிற படம்..இந்தியில் வெற்றி பெற்ற படத்தை தமிழில் ரீ மேக் பண்ணி இருக்கிறார்கள்.முக்கிய வேடத்தில் தல அஜித்குமார், வித்யா பாலன் நடித்திருக்கிற படம்.
தயாரிப்பாளர் போனி கபூர் இந்த படத்தை விநியோகஸ்தர்களுக்குப் போட்டுக் காட்டியிருக்கிறார்.
“ரொம்ப முக்கியமான படம். ஆனால் ரசிகர்களுக்கு மாஸ் ஆக்சன் படம்தான் பிடிக்கும்..அதனால் நீங்கள் சொல்கிற விலைக்கு படத்தை வாங்க முடியாது”என்று பின் வாங்கி இருக்கிறார்கள்.
போனிகபூர் சொன்ன விலை மிக மிக உச்சம் என்கிறார்கள். வழக்கமாக தல படம் என்ன உயர்வான விலைக்குப் போகுமோ அதைவிட அதிகம் சொல்கிறார். ஆனால் படம் நல்ல படம்தான்.ஆனால் ரசிகர்கள் விரும்புகிற மாஸ் படமாக இல்லை என்பது அவர்கள் சொல்கிற குற்றச்சாட்டு.
தமிழுக்காக பைட்,லவ் சீன்கள் இருந்தாலும் ரசிகர்கள் எதிர்பார்க்கிற படமாக இல்லையாம் .ஒழுக்கமான குடும்பப்படமாக இருந்தால் ரசிகர்கள் விரும்பமாட்டார்கள் என விநியோகஸ்தர்கள் நினைப்பது மாபெரும் தப்பு.
படத்தின் ரிலீஸ் தேதியையும் போனிகபூர் சொல்லவில்லை என்பதும் அவர்களின் குற்றச்சாட்டு.