பாண்டவர் அணி,சங்கரதாஸ் சுவாமிகள் அணி இரு அணியினர் மோதிக் கொள்ளும் நடிகர் சங்கத் தேர்தல் 23-ம் தேதி அடையாறு எம்.ஜி.ஆர்.ஜானகி கல்லூரியில் நடப்பதாக அறிவிக்கப்பட்டது.ஆனால் அங்கு போதிய பாதுகாப்பு அளிக்க முடியாது என்று போலீஸ் தரப்பில் சொல்லப்பட்டது.
ஆனால் அந்த இடத்தில் நடத்துவதற்கு போலீஸ் பாதுகாப்பு தர போலீசுக்கு உத்திரவிட வேண்டும் என்று விஷால் தரப்பில் வழக்குத் தொடரப்பட்டது.
வழக்கினை விசாரித்த உயர் நீதி மன்றம் இன்று முக்கிய தீர்ப்பு அளித்துள்ளது.
பொது மக்களுக்கு இடையூறு ஏற்படாதவாறு வேறு இடத்தில் தேர்தலை நடத்திக் கொள்ளுங்கள் என தீர்ப்பில் கூறப்பட்டு இருக்கிறது. அந்த இடம் எது என்பதை நாளை விஷால் தரப்பினர் கோர்ட்டில் சொல்லியாகவேண்டும்.