ஆடை படத்தின் முன்னோட்டக்காட்சி சற்று நேரத்துக்கு முன் வெளியாகியது.
மிரட்டல்னு சொல்லலாம்.
ஒரு நடிகை தன்னை முழு நிர்வாணமாக உரித்துப் போட்டு கூனிக் குறுகி உட்காருவதற்கு தனி தைரியம் வேண்டும்.
முன்னோட்டச்சுருளில்….
அம்மா கலைந்த கூந்தல் கலங்கிய கண்களுடன் காவல் நிலையத்துக்கு வருகிறாள்.
“எம்பொண்ணைக் காணோம்!”
கான்ஸ்டபிள் ஏகத்தாளமுடன் “பொண்ணைக் காணாம்னதும் நேரா போலீஸ் ஸ்டேஷன்தான் வந்துருவிங்களா?”
“அவ கடேசியா போன்ல பேசுறபோது குடிச்சிருந்தா சார்!” என்கிறாள் அம்மா.
காட்சிகள் கடகடவென மாறுகின்றன.
மின்சாரம் தாக்கியதைப்போல உணர்ந்து எழுகின்ற அமலாபால் தனது நிர்வாணம் அறிந்து முழங்கால்களை கட்டிக்கொண்டு மறைக்கப்பார்க்கிறார்.இதுதான் முன்னோட்டக்காட்சி.
தற்காலத்தில் ஸ்கின் டிரஸ் என போட்டுக்கொண்டு இப்படி நடிக்க முடியும்.ஆனால் அது நிர்வாணத்தின் மீது கண்ணாடியைப்போடுவது போன்றதுதானே! இந்தப்படம் தமிழ்ச்சினிமாவில் திசையை மாற்றும் திருப்பி விடும் என்றெல்லாம் சொல்ல வரவில்லை. ஆனால் நடிகைகள் மத்தியில் மீண்டும் ஒரு சிந்துசமவெளியை ஏற்படுத்தலாம்.
மாமனாரைக் கைக்குள் போட்டுக்கொண்டு அமலாபால் காமவிளையாட்டை நடத்தியது அந்த படத்தில்தானே!