உலக நாடுகள் முழுக்க இந்த செல்பி ஜிலேபிகள் இருக்கிறார்கள்.
பிரமுகர்கள்,நடிகர்கள்,நடிகைகள் ,தலைவர்கள் இவர்களுடன் செல்பி எடுத்து வைத்துக் கொள்ள ஆசைப்படுவார்கள்.
அதைப்போல பாக்யராஜ் அணிக்கும் ஆசை வந்து விட்டதோ என்னவோ!
பாண்டவர்கள் அணியினர் கவர்னரை சந்தித்து மனு கொடுத்து படம் எடுத்துக் கொண்டு விட்டார்கள். நாமும் ஆளுனரை சந்தித்து மனுவைக் கொடுத்து போட்டோ எடுத்துக் கொள்வோமே என்று இன்று மனு கொடுக்க கிளம்பி விட்டார்கள்.இன்று சங்கடஹர சதுர்த்தி.ராகுகாலமும் மத்தியானத்துக்கு மேலதான் . பத்து பத்தரை நல்ல நேரம் என ஆளுநர் மாளிகைக்கு கோஷ்டி கிளம்பி இருக்கிறது.
ஆளுநரும் சும்மாதானே இருக்கிறார். பாண்டவரை சந்தித்தது போல பாக்யராஜையும் சந்தித்து தலையை ஆட்டி வைக்கப் போகிறார்..
அடடா ஆளுநர் மாளிகைக்கு அவர்களும் போய் விட்டார்களா. அப்ப நாம் சும்மா இருக்கக்கூடாதே…வேற யாரு இருக்கா எடப்பாடி?இது பாண்டவர் அணியின் மனப்போராட்டம்.
“ஊகும் சரிப்பட்டு வராது. ஊளக்குசும்பு பண்றவரிடமா போறது? அதான் ஹை கோர்ட்டு இருக்கே ..அங்கே போயி புதுசா மனுக் கொடுப்போம்.நடிகர் சங்கத் தேர்தல் நடத்தனும்,.மாவட்ட பதிவாளர் சொல்றது சரியானது இல்ல. அரசு தலையீடு இருக்குன்னு சொல்லி வைப்போம்னு “பாண்டவர் அணியும் கிளம்புதாம்..