எல்லாமே அறை மயம்தான்!
ஜோதிகா என்பவர் சீரியல் நடிகை ராக மாதுரிக்கு ஹேர் ஸ்டைலிஸ்ட்டாக இருந்தார். ஷூட்டிங்கில் இருந்து வீடு திரும்பிய நடிகை தன்னுடைய காஸ்ட்லியான தங்க சங்கிலி காணமல் போனதை உணர்ந்தார்.
அவருடைய சந்தேகம் தனது தலையலங்கார ஜோதிகாவின் மீது விழுந்தது. உடனே போலீசில் புகார் செய்ய எளியவனை வலியார் உதைத்த கதை ஆகி விட்டது. நகையை நான் எடுக்கவே இல்லை என்று கதறியிருக்கிறார்.
ஆனால் காணாமல் போன செயின் நடிகையின் காரிலேயே கிடந்திருக்கிறது. இதை போலீசில் நடிகை சொல்லி கேசை வாபஸ் வாங்கி விட்டார்.
ஆனால் ஜோதிகாவின் குற்றமற்ற மனம் அதை தாங்கிக் கொள்ள வில்லை!
பலம் கொண்ட மட்டும் ராக மாதுரியின் கன்னங்களில் விளையாடிவிட்டார்.
பழுத்த கன்னத்துக்கு களிம்பு தடவி வருகிறாராம் .
இன்னொரு கேஸ். இது வழக்கு வரை செல்லவில்லை.
மெஹரீன் கவுர் ஆந்திராவில் பிரபலமான நடிகை. இவர் பத்தாவது படித்த போது பார்ப்பதற்கு கொழு கொழு வென இருப்பாராம்.
கை சும்மா இருக்காத ஒருவன் விளையாடி இருக்கிறான்
நடிகையும் அந்த வாலிபரின் கன்னங்களில் விளையாடி இருக்கிறார்.
தன்னால் என்றுமே மறக்கமுடியாத சம்பவம் என்கிறார் மெஹரீன்