“பெரிய பதவி கிடைத்த பிறகுதான் உனக்குக் கல்யாணம் நடக்கும் “என்று எந்த ஜோசியக்காரனாவது சொல்லியிருந்தால் போர்டு போட்டுக் கொண்டு உட்கார்ந்து விடலாம்.
திரினாமுல் காங்கிரஸ் எம்.பி.ஆன நடிகை நஸ்ரத் ஜகான் திடீர் என கல்யாணம் செய்து கொண்டிருக்கிறார். கொல்கத்தா பிசினஸ்மேன் நிகில் ஜெயின் என்கிற மார்வாரியை துருக்கியில் வைத்து கல்யாணம் செய்து கொண்டு அதை தனது டிவிட்டர் பக்கத்தில் வெளியிட்டிருக்கிறார்.