ஹிருத்திக் ரோஷனை தெரியாத ரசிகர்கள் இருப்பது அரிது.
தமிழ்மக்களுக்கும் நன்கு அறிமுகமான ஆறுவிரல் நடிகர். இவரது தந்தையும் பாலிவுட்டில் கொடி கட்டி வாழ்ந்த நடிகர்தான்.
ஹிருத்திக் ரோஷனின் சகோதரி சுனைனா.
இவர் ஒரு பத்திரிகையாளரை காதலிக்கிறார். வாழ்ந்து கொண்டிருக்கிறார்.
அவர் ஒரு இஸ்லாமியர். இவரைத்தான் பயங்கரவாதி என சொல்லி சுனைனாவை தள்ளிவைத்திருக்கிறார்கள்.
மாதச்செலவுக்கு ரூபாய் ஐம்பதாயிரம்.கொடுக்கிறார்கள்.
“இது போதவில்லை”என குற்றம் சாட்டுகிற சுனைனா தன் சகோதரன் ஹிருத்திக்கை கொடுமைக்காரன் “என்கிறார். “பயங்கரவாதியை காதலிப்பதா என கேட்டு என்னை அடித்து விட்டார் “என்பதாகவும் சொல்கிறார்.
“எனக்கு வீடு கட்டித்தருவதாக ஹிருத்திக் சொன்னார் .தரவில்லை. வார்த்தை தவறி விட்டாய் சகோதரா. நான் ஓர் அபார்ட்மெண்ட்டில் குடியேறி இருக்கிறேன். மாத வாடகை இரண்டரை லட்சம்தான்! இதைப் போய் அதிகம் என்று திட்டுகிறார்.இது நியாயமா?” என கேட்கிறார்.
அது சரி ,காதலனுடன் வாழ்க்கை நடத்துகிற பெண் கேட்கவேண்டிய கேள்விதான்.அந்த காதலரின் வருமானம் என்ன மேடம்.!
சுனைனா வயது 47.