எழுத்து இயக்கம்:ஹரீஸ்ராம்,தயாரிப்பு:சுரேகா நியபதி, இசை:அனிருத்,விவேக் மேர்வின்,சந்தோஷ் தயாநிதி,ஒளிப்பதிவு:நரேன் இளன், வசனம்: ராம்ராகவ், பிரபாகரன்.
தர்ஷன்,தீனா,கீர்த்தி பாண்டியன்,தாரணி வாசுதேவ்,
**********************
இந்த வாரம் எதிர்பார்க்கப்பட்ட சிந்துபாத் படம் வெளியாகவில்லை.
பெரிதாக எதிர்பார்க்கப்பட்ட தனுஷின் ‘பக்கிரி’யும் கவரும் வகையில் இல்லை.
பேசப்படும் படமாக இருக்கலாம் என எதிர்பார்க்கப்பட்டவைகளில் ‘தும்பா ‘வும் ஒன்று. விஎப்எக்ஸ் வித்தைகள் சென்னையில் உள்ள நாக் ஸ்டுடியோவில் செய்யப்பட்டவை என்கிற காரணத்தால் மற்ற தயாரிப்பாளர்கள் ஆர்வமுடன் இருந்தார்கள். புலி, புலிக்குட்டி, குரங்கு, காட்டெருமை எல்லாம் அசலாக இருந்தன.
வி எப் எக்ஸ் குழுவினருக்கு பாராட்டுகள்.
குழந்தைகளை கவரவேண்டும் என்பதில் கவனம் செலுத்தி கதையை அமைத்திருக்கிறார் இயக்குநர் ஹரீஸ் ராம். முற்பாதி பலவீனத்தை காமடியன்களால் சரிக்கட்டப்பார்த்து இருக்கிறார். சீரியல் எபெக்ட். வீட்டில்தான் எரிச்சல் என்றால் வந்த எடத்திலும் அதே ரோதனையா?
நாயகன் தர்ஷனின் இயல்பு அறுந்த நடிப்பு.
ஆனைமலை டாப் சிலிப்பில் புலி சிலைக்கு வர்ணம் பூசப்போனவர்களை வைத்துக் கொண்டு போட்டோ எடுக்க விரும்புகிறார் கீர்த்தி பாண்டியன். உயிருடன் நடமாடும் புலிதான் இவரது இலக்கு. முதல் படம் என்கிற நினைப்பே இல்லாமல் நடித்திருக்கிறார்.வரவேற்கப்பட வேண்டியவர்.
மாவட்ட பாரஸ்ட் அதிகாரியின் புலி கடத்தலை கண்டுபிடித்து பொதுமக்களின் உதவியால் புலியும் அதன் குட்டியும் மீட்கப்படுவதுதான் பின்பாதி. பசங்களுக்கு ஜாலி.
நரேன் இளனின் ஒளிப்பதிவுதான் நம்மை உட்கார வைக்கிறது. காட்டின் அடர்த்தி,பசுமை,குளிர் எல்லாமே தியேட்டருக்குள் உணர்த்தப்படுகிறது.