திரையுலக மார்க்கண்டேயன் சிவகுமார் வீட்டுச் செல்லங்களில் தனித்த செல்லம் மகள் பிருந்தாதான்.! அப்பா,அம்மா,அண்ணன்கள் என எல்லோராலும் நேசிக்கப்பட்ட பிருந்தாவை அவரது கணவர் சிவகுமாரும் உயிரென காதலிக்கிறார்.
அண்ணன்கள் சூர்யா கார்த்தி இருவரும் திரை உலகில் உச்சத்தில் இருக்கிறார்கள். சகோதரி பிருந்தா பின்னணி பாடுவதில் முன்னணிக்கு வந்து கொண்டிருக்கிறார்.
மிஸ்டர் சந்திரமவுலியில் ஆரம்பமாகிய பயணம் அண்ணி ஜோதிகாவின் ராட்சசி படத்திலும் தொடர்கிறது.
பள்ளி ஆசிரியையாக ஜோதிகா நடித்திருக்கிற படத்தை கவுதம் ராஜ் இயக்கியிருக்கிறார்.
ட்ரீம்வாரியார் பிக்சர்ஸ் தயாரிப்பில் உருவாகியிருக்கும் இந்த படம் மிகுந்த எதிர்பார்ப்பினை ஏற்படுத்தியிருக்கிறது.