எஸ்கேப் ஆர்டிஸ்ட் மோஷன் பிக்சர்ஸ் – காட் பிக்சர்ஸ் பட நிறுவன ங்கள் இணைந்து அதிக பொருட்செலவில் பிரபுசாலமன் இயக்கத்தில் “ கயல் “ படத்தை தயாரித்துக் கொண்டிருகிறது.
புதுமுகம் சந்திரன் கதாநாயகனாக நடிக்கிறார். கதாநாயகியாக ஆனந்தி நடிக்கிறார். இவர்களுடன் வின்சன்ட், ஆர்த்தி, ஜெமினிராஜேஸ்வரி, யார்கண்ணன், பாரதிகண்ணன், ஜேக்கப், யோகிதேவராஜ், ஜானகி சொந்தர்,பிளாரன்ட் C.பெரேரா,வெற்றிவேல்ராஜா, பாலசுப்பிரமணியம், மைம்கோபி, தரணி, அன்புமதி,ஜிந்தா, ஜென்னிஷ் ஆகியோர் நடித்துள்ளனர் .சமீபத்தில் இப்படத்தை பார்த்த சென்சார் அதிகாரிகள் படத்திற்கு ஆடியோ மற்றும் காட்சிகளில் ஒரு கட் கூட இல்லாமல் “ U ” சர்டிபிகேட் வழங்கி பாராட்டி உள்ளனர்.
வழக்கமாக பிரபுசாலமன் படங்களின் அணைத்து பாடல்களும் ஹிட்டாகும். அதேமாதிரி கயல் படத்தின் பாடல்களும் பட்டி தொட்டி எங்கும் ஹிட்டாகி உள்ளது. கயல் திரைப்படம் இம்மாதம் (டிசம்பர் ) 25 ஆம் தேதி கிறிஸ்துமஸ் அன்று உலக முழுவதும் வெளியாகிறது.