பெரிய பரபரப்பை ரசிகர்கள் மத்தியில் அலை அடிக்க வைத்திருக்கும் பிகில் படத்தின் போஸ்டர் அரசியல் வாதிகளின் மத்தியில் கடுமையான அதிர்ச்சியையும் ஏற்படுத்தி இருக்கிறது.
குறிப்பாக தமிழகத்தில் படுதோல்வி அடைந்த இரு பாஜக தலைவர்கள் அதிர்ச்சியில் உறைந்து போய் இருக்கிறார்கள். அவர்கள்தான் பாஜகவின் மீது அதிருப்தி வளர்வதற்கு காரணமாக இருந்தவர்கள்.
பிகில் படத்தில் சற்றே வயதான மீனவர் விஜய்யை நன்றாக கவனித்துப் பாருங்கள்.
அணிந்திருப்பது காவி வேட்டி. நெற்றியில் குங்குமம். கழுத்தில் சிலுவை..மதுரை பக்கம் உள்ளவர்கள் எப்படி குங்குமம் வைப்பார்களோ அதே மாதிரி வைத்திருக்கிறார். பெயரும் ராயப்பன் என்று இருக்கலாம் என்கிறார்கள். அதுவும் மதுரை மாவட்டத்தை சேர்ந்த சிலர் வைத்துக் கொள்கிற பெயர்தான்.
விஜய் படம் சர்கார் வந்து மத்தியிலும் மாநிலத்திலும் ஆள்கிற கட்சிகளை அதாவது கொள்கைகளை கடுமையாக விமர்சித்த வசனங்களால் மக்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட்டது. இதனால் காவி கட்சியை சேர்ந்தவர்கள் விஜய் சார்ந்த மதத்தை குறிப்பிட்டு ஜோசப் விஜய் என்பதாக சொல்லி பேசினார்கள்.
இதிலென்ன ஆச்சரியம் நான் ஜோசப் விஜய்தான் என அவரும் சொல்லி மூக்கறுத்தார். இதைப்போல குஷ்புவையும் மதம் சார்ந்த பெயரான நக்கத்கான் என்பதை சொன்னார்கள். அவரும் ஆமாம் நான் காவிகளுக்கு நக்கத்கான் இந்தியர்களுக்கு குஷ்பு என்று பதிலடி கொடுத்தார்.
ஆக இந்த சம்பவங்களை வைத்து மதசார்பற்ற நாடு என்பதை வலியுறுத்தும் வகையில் கடுமையான வசனங்களால் பிகில் படத்தில் அறிவுறுத்தி இருக்கிறார்கள் என சொல்லப்படுகிறது.
விஷம் வைத்தவர்கள் வினையை அனுபவிக்க வேண்டியதுதானே!