நேர்கொண்ட பார்வை படத்தின் பெயர்.
போனிகபூர் தயாரிப்பாளரின் பெயர். மறைந்த ஸ்ரீ தேவியின் கணவர், பாலிவுட் நடிகை ஜான்வி கபூரின் அப்பா.
இத்தனை புகழ் கொண்ட பாலிவுட் பெரும்புள்ளியான இவர் மீது ஒருவர் மோசடி புகார் கொடுத்திருக்கிறார்.
பிரவீன் ஷியாம் சேத்தி என்பவர் போனி கபூர், முஸ்தாபா, பவான் ஜாங்கிட் ஆகிய மூவர் மீதும் 2.5கோடி ரூபாய் மோசடி செய்ததாக புகார் கொடுத்திருக்கிறார்.
நட்சத்திரக் கிரிக்கெட் நடத்தப்போவதாக சொல்லி ஏமாற்றி விட்டார்கள். பயப்படாதீர்கள்,டபிள் மடங்காக பணம் கிடைக்கும் என்று போனி கபூர் சொன்னதாகவும் ஆனால் கிரிக்கெட் போட்டியே நடக்கவில்லை என்றும் புகாரில் கூறி இருக்கிறார்.
இபிகோ.420,406,120 பி.ஆகிய பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டிருக்கிறது.