2015-2018 -ம் தேர்தலில் ஒன்றாக இருந்து வெற்றி பெற்று உருப்படியான வேலைகள் செய்து முடித்தவர்கள் 2019-22-ம் தேர்தலில் ஒருவர் மீது ஒருவர் குற்றம் சாட்டிக் கொண்டு தேர்தல் நடத்துகிறார்கள்.
அதுவும் கோர்ட்டு வழியாக ! வாக்குப்பதிவு நடத்த குறைந்த நேரமே இருந்த நிலையில் அனுமதி வழங்கப்பட்டது. இதனால் அஞ்சல் வழியாக வாக்குப் போடுவோர்கள் பாதிக்கப்பட்டார்கள். தாமதிக்கப்பட்ட நீதியின் விளைவுதான் இது.!
தபால் வாக்கு காலதாமதமுடன் வந்த நிலையில் தன்னால் வாக்களிக்க இயலவில்லை என நடிகர் ரஜினிகாந்த் வருத்தத்துடன் டுவிட்டரில் தெரிவித்த நிலையில்,. இந்த நிலையில், நடிகர் சங்க தேர்தலில் பாண்டவர் அணியில் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடும் ரமணா, பசுபதி ஆகியோர் ஓய்வு பெற்ற நீதிபதியும், தேர்தல் நடத்தும் அதிகாரியுமான பத்மநாபனை சந்தித்து, தபால் வாக்குப்பதிவை ஒருநாள் நீட்டித்து வழங்க வேண்டும் என கோரிக்கை மனு அளித்தனர். அதில், பல்வேறு மாவட்டங்களில் வசிக்கும் நடிகர் சங்க உறுப்பினர்களுக்கு தபால் வாக்குச்சீட்டு சரிவர சென்றடையவில்லை என்றும் தெரிவித்தனர்.
சென்னை மயிலாப்பூரில் உள்ள புனித எப்பாஸ் பள்ளியில் நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை 7.20 மணிக்கு தொடங்கி, நடைபெற்று வருகிறது. .இரண்டு அணிகள் என மோதிக் கொண்டிருக்கிறார்கள்.
பாண்டவர் அணியில் தலைவர் பதவிக்கு நாசரும், பொதுச் செயலாளர் பதவிக்கு விஷாலும், பொருளாளர் பதவிக்கு கார்த்தியும், துணைத் தலைவர்கள் பதவிக்குபூச்சிமுருகன் மற்றும் கருணாஸும் போட்டியிடுகின்றனர்.
செயற்குழு உறுப்பினர்களுக்கு கோவை சரளா, பிரசன்னா, சிம்ரன்,பசுபதி, நந்தா, ராஜேஷ், மனோபாலா,;ஜெரால்டு, காளிமுத்து, ரத்னப்பா, அஜய் ரத்னம், பிரேம், பிரகாஷ், சோனியா போஸ், தளபதி தினேஷ், ஜூனியர் பாலையா, ஹேமா, குஷ்பூ, லதா, நிதின் சத்யா,பருத்திவீரன் சரவணன், ஆதி, வாசுதேவன், காந்தி காரைக்குடி ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
சுவாமி சங்கர தாஸ் அணியில், தலைவர் பதவிக்கு பாக்யராஜூம், பொதுச் செயலாளர் பதவிக்கு ஐசரி கணேஷும், பொருளாளர் பதவிக்கு பிரசாந்தும், துணைத்;தலைவர்கள் பதவிகளுக்கு உதயா மற்றும் குட்டிபத்மினிஆகியோரும் போட்டியிடுகின்றனர். செயற்குழு உறுப்பினர் பதவிகளுக்கு பூர்ணிமா பாக்யராஜ், காயத்ரி ரகுராம்,பரத், ஸ்ரீகாந்த், சங்கீதா, கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.
வாக்களிக்க வந்த நடிகை ரோகிணிசொன்னது சிந்தனைக்குரியதாகும்.,
“இது கட்டிடத்துக்கான தேர்தல் தான்.யார்வந்து கட்டிடம் கட்டினாலும் நல்லது தான் ஆனால்,ஒரே ஆளு நடிகர் சங்கக்கட்டிடத்தை நானொருவனே ரூ.10கோடி,ரூ.12 கோடி செலவழித்து 6 மாதத்தில் கட்டித் தருகிறேன்என்பதை எப்படி ஏற்றுக்கொள்ள முடியும்,?
நாளைக்கு அவரிடம் தானே நாம் அடிமையாக நிற்க வேண்டும்.கட்டிடத்துக்கு கலை நிகழ்ச்சி நடத்தினால் என் மாதிரி நடிகைகள் ஆடினோம் பாடினோம் என்பதைவிட இந்த கட்டிடம் வளர நாங்களும் வியர்வை சிந்தி உழைத்திருக்கிறோம் என்ற பெருமையாவது இருக்கும்.
இதனால் விஷால் எடுக்கும் முயற்சி வெற்றி பெறவேண்டும். வாழ்த்துக்கள்”என்றார்.