இப்படி இருந்தால் எப்படி கட்சியை வளர்க்க முடியும் ?
கேப்டன் விஜயகாந்தின் மகன் விஜயபிரபாகரன் கட்சியை தூக்கி நிறுத்துவார் என்று பார்த்தால் மிச்சமிருப்பவர்களையும் விரட்டி விடுவார் போலிருக்கிறது.
தமிழகத்தை குடிதண்ணீர் பஞ்சம் புரட்டிப் போட்டுக் கொண்டிருக்கிறபோது விஜய்பிரபாகரனின் அறிவார்ந்த பேச்சை பார்த்து மக்கள் மிரண்டு போய்விடுவார்கள் போலிருக்கிறது.
“தண்ணீரை அதிமுக கண்டு பிடிக்கவில்லை”என்கிறார் வாரிசு.
இத்தோடு நிற்காமல் மழை பெய்தால் தண்ணீர் பிரச்னை நீங்கி விடும் என்கிறார். யாருக்குத்தான் தெரியாது!