தோற்றம் அழகு.
முந்தைய பிக் பாஸ் அரங்குகளைக் காட்டிலும் தோற்றம் கண்களைக் கவரும் வகையில் இருக்கிறது. லவ்லி!
என்ன… முதன் முதலில் ஒரு இளைஞரையோ ,யுவதியையோ அறிமுகம் செய்திருக்கலாம்.
மூதாட்டி பாத்திமா பாபுவை அறிமுகப்படுத்தி விட்டார்கள்.ஹெவி மேக்கப் ! சற்றே வலித்தது. விருந்தினர் சாப்பிடும் இலையில் முதலில் உப்புவை வைத்து பழகிவிட்ட பண்பாடு நமதல்லவா!வரவேற்கவேண்டியதுதான்
உலக நாயகன் பிக்பாஸ் அரங்கினை சுற்றிப் பார்த்தபோது இரண்டு ஜீன்ஸ் பெண்கள் சற்றே அயல் மாநிலத் தோற்றத்தில்.! படுக்கைகளை ஒழுங்குபடுத்திக் கொண்டிருந்தார்கள்.
சென்னையில் மட்டுமின்றி முக்கிய நகரங்களில் வட இந்தியர்கள் நடமாட்டம் அதிகமிருப்பதால் செட்டில் இருந்த அவர்களிடம் கமல் இந்தியில் கேட்க,
அவர்கள் திகைத்து நிற்க,
“நீங்கள் தமிழா?”என கமல் கேட்க பதில் நமக்கு கேட்கவில்லை.