இயக்கம்.: லட்சுமி ராமகிருஷ்ணன். இசை:ஜிப்ரான். ஒளிப்பதிவாளர்: கிருஷ்ண சேகர் .
கிஷோர் ,ஸ்ரீ ரஞ்சனி, ‘பசங்க’ கிஷோர், லவ்லின்.
*************
“டூ தவுசண்ட் பிப்டீன் ல நடந்த வெள்ளத்த இப்ப நெனச்சாலும் ஆடிப்போறது. வெள்ளத்தில மாட்டிண்டு தவியா தவிச்சமே… அத அப்படியே ஹவுஸ் ஓனர் படத்தில் வெச்சிருக்கா.! இப்ப ஸ்ட்ரெய்ட் ஆப்போசிட் ..வெள்ளம் வரணம்னு யாகம் பண்றா! பூஜை நடத்துறா,.! நேக்கு பிக்சர் பிடிச்சிருக்கு!”
“மை காட்…தப்பிச்சன்டி! எங்கே வறுத்து வடாம் பண்ணிடுவியோன்னு …..நோக்கு கதை புரிஞ்சதோ …டவுட் இல்லியே?”
“இல்லை.! ராதாவின் ஆத்துக்காரர் ரிட்டயர்டு மிலிட்டரி ஆபீசர். . பாவம் அல்ஜீமர் நோய். எல்லாமே மறந்துடுவார். அவர்ட்ட ராதா படுறபாடுதான் கதை. அதுவும் மெட்ராஸ்ல பிசாசு மழை கொட்டறது. மனுஷன் மக வீட்டுக்குக்கூட போக மாட்டேங்கிறார்.அயம் ஹவுஸ் ஓனர்னு ஒரு உறுமல். பாவம் அந்த மனுஷி அப்படியே நொறுங்கிப் போறா.!பெஸ்ட் ஆர்ட்டிஸ்ட்னு செலக்ட் பண்றவா ராதாவா நடிச்ச ஸ்ரீ ரஞ்சனி, வாசுதேவனாக ஆக்ட் பண்ணின கிஷோர் இவா ரெண்டு பேரையும் மறந்தா அவா மனுசாளே இல்ல.பாலிடிக்ஸ் பண்றான்னுதான் சொல்வேன். லட்சுமிராமகிருஷ்ணனின் டப்பிங் சூப்பர்.”
“சினிமாங்கிறத மறந்துடுறடி. நான் கவனிச்சிண்டே இருந்தேன். செகண்ட ஆப்ல ஒய் ஆர் யு வீப்பிங்? “
“நீமரும்தான் கண்ணீர் விட்டீர். நாந்தான் வாட்ச் பண்ணின்டே இருந்தேனே. என் மாமியார் மண்டைய போட்டப்பக் கூட கலங்காத மனுஷன் இப்படி விசும்பறாரேன்னு நேக்கு ஆச்சரியம்.!”
“மாலு …லாஸ்ட் சீன்ல அவா ரெண்டு பேரும் ஜலசமாதி அடையறத வித்தியாசமா காட்டிருக்கா. ஜீவன் போனப்ப வீட்டுக்குள்ள மெதக்குற டப்பா,சோபா மாதிரிதான் மனுசாள் உயிரும்.! அவா ரெண்டு பேரையும் காட்டவே இல்லியே.. .ராதா ,வாசுதேவன் ரெண்டு பேரும் பெர்பெக்ட் மேச்!”
“சின்ன வயசு ஜோடியா வந்த பசங்க கிஷோர்.லவ்லின் ரெண்டு பேருமே ரொம்ப நன்னா பண்ணிருந்தா,. நீங்க ஒன்ன கவனிச்சேளா…சின்ன வயசு ராதா மூக்கு குத்திக்கல. பெரிய ராதா குத்திண்டிருப்பா,.!”
“நோக்கு எவ என்னன்னா போட்டுருந்தாங்கிறத நோட் பண்ற புத்தி இன்னும் போகலை.! கேமராமேன் கிருஷ்ண சேகர்,மியூசிக் டைரக்டர் ஜிப்ரான் இவா ரெண்டு பேரும் இல்லேன்னா படத்தில் ஜீவனே இருக்காது. என்ன சொல்றே?”
கரெக்ட்.”
சினிமா முரசத்தின் மார்க் 3 / 5
“