சிம்பு, ஜெகபதி பாபு, டாப்ஸி பன்னு மற்றும் கேத்தரின் தெரசா நடிப்பில் உருவாகி வந்த கான் திரைப்படம் நிறுத்தி வைக்கப்பட்டதாக பல்வேறு
வதந்திகள் உலா வந்தன.இந்நிலையில் கான் நிறுத்தப்பட்டது உண்மைதான் என்று கூறி வதந்திகளுக்கு முற்றுப்புள்ளி வைத்திருக்கிறார் படத்தின் இயக்குனர் செல்வராகவன். இது குறித்து
அதிகாரப்பூர்வமாக தனது ட்விட்டரில் இயக்குநர் செல்வராகவன் அதிகாரப்பூர்வமாகவே அறிவித்திருக்கிறார். இதற்கு காரணம் , இப் படத்தின் படப்பிடிப்பு தொடங்கி பலநாட்கள் ஆகியும் கூட
தகுந்த நிதியுதவி படத்திற்கு கிடைக்கவில்லையாம்.இதனால் மேற்கொண்டு படப்பிடிப்பை தொடராமல் செல்வராகவன்’ கான் ‘ படத்தை அடியோடு நிறுத்தி விட்டார் என்கிறார்கள். இது குறித்து இயக்குனர் செல்வராகவன் கூறியதாவது,
“கான் படம் குறித்து நிறைய வதந்திகள் உலா வருகின்றன,நானும் நிறைய கேட்டு வருகிறேன். நான் சில விஷயங்களை இங்கு தெளிவுபடுத்த விரும்புகிறேன் . “கான் படத்தின் கதை என் மனதுக்கு மிகவும் நெருக்கமானது, மேலும் எனது கனவுத் திட்டத்திற்கு தகுந்தாற்போல கான் படக்குழுவும் அமைந்தது”‘கான்’ படத்தை இப்போதைக்கு தற்காலிகமாக நிறுத்தி வைத்திருக்கிறோம், நாங்கள் அனைவரும் இதனை ஒரே கண்ணோட்டத்தில் தான் பார்க்கிறோம்.
கான் படத்தை அடுத்த ஆண்டுக்கு தள்ளி வைத்திருக்கிறேன், படத்திற்கு தேவையான நிதி கிடைத்ததும் கான் தொடங்கப்படும். சிம்பு மற்றும் ‘கான்’ படக்குழுவினரை நான் மிகவும் மிஸ் செய்கிறேன்” என்று செல்வராகவன் தெரிவித்திருக்கிறார். செல்வராகவனின் இந்த அறிவிப்பால் தற்போது சிம்புவின் திரை வாழ்க்கையில் மீண்டும் பெரிய அடி விழுந்திருக்கிறது என்றே கூறலாம்!