“கற்பனைக்கு எல்லையே இல்லை.!
இஷ்டத்துக்கு பறக்கும் எல்லைகள் கடக்கும் பறவைகள் மாதிரி.!
அதிலும் ஒரு சுகானுபவம் இருக்கு. இப்ப சிவகார்த்திகேயன் 17 ஸ்கிரிப்ட் ஒர்க் முடிஞ்சிருக்கு.
அதை பத்திரமா வச்சிருக்கேன். சிலது டைனசர் மாதிரி.அதெல்லாம் கட்டுப்படுத்திட்டா பிற்பாடு சேதம் அதிகம் வராது.
எனது கதை வசனம் உலகம் சுத்திப் பறந்திருக்கு.
.அழகியல்.அற்புதம்.மனசைத் தொடும்.
மந்த மாருதம் தவழும் இந்த வேளையே சுகம் என்பதைப் போல வந்திருக்கிறது கதை” என புல்லரித்துப் போய் இருக்கிறார் விக்னேஷ் சிவன்.
அவரும் சிவகார்த்திகேயனும் இணையும் அந்த எஸ்.கே.17 படத்துக்கான நட்சத்திரத் தேர்வு விரைவில் முடிவடையும் .என்கிறார் விக்கி.
ஹீரோயின் யாராக இருக்கும்?
விக்கியின் கற்பனையில் சிறகடித்த சித்திரக்கிளி யாரோ, அவர்தான் நாயகியாக இருப்பார்.
எஸ்.கே.ரசிகர்களுக்கு இனிய விழாதான்.