நடிகர் ரஜினிகாந்த இன்று காலை 8 மணிக்கு தனது வாக்கை பதிவு செய்தார் பின் நிருபர்களிடம் கூறியதாவது,அனைவருக்கும் என் வணக்கம். இது நம்ம நடிகர்கள் எல்லாம் ஒரே குடும்பம்.ஒரே இனம்,ஒரே ஜாதி,என்றும் .நமக்குள்ளஒற்றுமை,இருக்கும்,இருக்கணும் சமீபகாலமா வாக்கு வாதங்கள் நடந்துகிட்டு இருக்கு அது வந்து ஏதோ நடந்து விட்டது .அதுக்காக நமக்குள்ள ஒற்றுமை இல்லைன்னு யாருமே நினைக்க கூடாது ஒரு போட்டி வந்து விட்டது ,யார் ஜெயிச்சு வந்தாலும் அவங்களுக்கு என் வாழ்த்துக்கள்.நீங்கள் எல்லாம் ஆயிரம் தடவை யோசனை பண்ணி வாக்குகளை அளித்திருப்பீர்கள்.நான் அவர்களுக்கு இரண்டு கோரிக்கைகளை வைக்கிறேன். அப்படி ஜெயிச்சு வந்தவர்கள் ,தென்னிந்திய நடிகர் சங்கத்தை தமிழ்நாடு நடிகர் சங்கமா மாத்தனும். உயிரே போனாலும் ,உயிரே போனாலும் வாக்கை நிறைவேத்தனும் ,முடியாமல் போனால் உடனே ராஜினாமா செய்து விட வேண்டும் அது உங்கள் மனசுக்கும் நிம்மதி. எதிர் காலத்திலும் பேசப்படுவீர்கள் எடுத்து காட்டாகவும் இருப்பீர்கள்.இவ்வாறு அவர் கூறினார்