வழக்கம்போல குத்தாட்ட காலை வணக்கம் போட்டு விட்டு அவரவர் வேளைகளில் இறங்கினார்கள்,
இன்றைய சோகச்செய்தி வாசிப்பாளர் சித்தப்பு சரவணன்.
தனது ரெண்டு பொண்டாட்டி கதையை இதுவரை யாருக்கும் சொன்னதில்லை இங்கேதான் சொல்கிறேன் என அவரே விம்மிக்கொண்டு சொன்னார்.
இந்தக்கதையை விட அவருடைய அண்ணன் ஐந்து லட்சம் ரூபாயை சுருட்டிக் கொண்டு ஓடிய கதை நல்லா இருந்தது. அதையொட்டிய அவரது சபதமும் நல்லா இருந்தது.
“டே..என்ன பொட்டப்பையன்னு சொன்னிங்கள்ள,ஆம்பள பிள்ள பெத்துருக்கேன்டா! . இனிமே உங்க சங்காத்தமே வேணான்டா..அண்ணன் என்ன தம்பி என்னடா இந்த அவசரமான உலகத்திலே “ரேஞ்சுக்கு பின்னிட்டார் சரவணன்.
சரவணனுக்கு சோக மேட்டரை மத்தவங்க உருகி மருகி சொன்ன மாதிரி அவ்வளவு சிறப்பாசொல்லத் தெரியல.
புதுசா வந்து சேர்ந்த மீரா மிதுன் என்கிற பொண்ணை வனிதாவும் அபிராமியும் கரம் வைத்து காய்ச்சுகிறார்கள். வனிதா எப்படிப்பட்ட ஆளு. பெத்த அப்பா விஜயகுமாரை கலங்கடிச்சிவர். மாஜி கணவர்களுடன் எப்படியெல்லாம் மல்லுக்கட்டினார் என்பது நாட்டுக்கே தெரியும்.அவரிடம் போய் இந்த பொண்ணு சிக்கி இருக்கு. செதச்சிருவாரே
“உன் போதைக்கு நானென்ன ஊறுகாவா”என்று அவர் உறுமின உறுமலைப் பார்த்தால் செய்திகள் சிறப்பா இருக்கும்னு தோணுது.!!