கதை வசனம் இயக்கம்:கோபிநாத், இசை: கே.எஸ்.சுந்தரமூர்த்தி,ஒளிப்பதிவு :பிரவின்குமார், வசனம்:பாபு தமிழ்
வெற்றி,ரோகிணி,கருணாகரன்,ரமா, மைம் கோபி,
*******************
எட்டுத்தோட்டாக்களில் “நாங்களும் எடுப்போம்ல” என திரில் பட டைரக்டர்களுக்கு சுருக் வைத்தியம் கொடுத்தவர்கள் ஜீவியில் மிகவும் வித்தியாசமாக ,பிரிலியன்டான ஒரு சஸ்பென்ஸ் திரில்லரை கொடுத்திருக்கிறார்கள். பெஸ்ட் ஸ்கிரீன் ப்ளே. பாமரனுக்கும் புரியக்கூடிய ஸ்டைலில் படம் இருக்கிறது.
இயக்குநர் கோபிநாத்,நடிகர் வெற்றி ,கருணாகரன் கூட்டணி கட்டை விரல் உயர்த்தி வெற்றியை காட்டி தங்களை அடுத்தகட்டத்துக்கு கொண்டு சென்றிருக்கிறது.
சூப்பர் கதை.! கிழக்கு மேற்காக சென்ற கதையை எந்த புள்ளியிலாவது இணைக்க முடியுமா?
முடியும் என்று காட்டியிருக்கிறார் இயக்குநர். நமக்கும் ஆச்சரியமாக இருக்கிறது.இதுவரை யாரும் அணுகாத கோணத்தில் இவ்வளவு துணிச்சலாக கதை பண்ண முடியுமா?
முடியும்.! ஹாட்ஸ் ஆப் ‘ஜீவி’ பட யூனிட்.!
வெட்டி ஆபிசராக சுற்றிக்கொண்டிருந்த வெற்றி கடைசியில் ஒரு கடையில்ஜூஸ் பிழியும் வேலை பார்க்க துணைக்கு டீ ஆற்றும் வேலையில் இருக்கும் கருணாகரன் நண்பனாகினார் இவர்களின் கடைக்கு எதிரில் செல்போன் ரீ சார்ஜ் கடையில் இருக்கும் மோனிகாவுக்கு வெற்றி மீது லவ் வருகிறது. இந்த லவ் பாதியிலேயே அறுந்து போகிறது.
போலீசைப் பற்றிய புத்தகம் படிக்கும் வெற்றிக்கு போலீசிடம் மாட்டாமல் தப்பிக்க வழி தோன்றுகிறது. பார்வையற்ற மகளுக்காக நகைகள் சேர்த்து வைத்த ரோகிணியின் வீட்டில் கைவைக்க அதே நேரத்தில் அப்பாவின் ஹார்ட் அட்டாக் சேதியும் வந்து சேருகிறது .இலவச இணைப்பு மாதிரி அக்கா ஓடிப்போன செய்தியும் கிடைக்கிறது.
இந்த சம்பவங்களை எல்லாம் இயக்குநர் கோபிநாத் ,வசனகர்த்தா பாபு தமிழ் இருவரும் இணைந்து இயல்பான காட்சிகளாக தொடுத்து ஆளு உயர மாலை தயாரித்திருக்கிறார்கள். குடும்பத்துடன் பார்க்க வேண்டிய படம் என்பதால் இந்த படத்தின் சில காட்சிகளை இங்கு விவரிக்க தேவையில்லை. படித்தபின் படத்தைப் பார்க்கிறபோது எங்கேயோ பார்த்திருக்கிறோமே என்கிற எண்ணம் ஓடும்.
ரோகிணி, ரமா,மைம் கோபி இவர்களின் இயல்பான நடிப்பு படத்துக்கு பக்க பலம்.