பிக் பாட்டி பாத்திமா பாபு : நாட்டாமை,
அடாவடி அக்கா வனிதா : சண்டியர்,
புள்ளைப்பூச்சி மதுமிதா :சட்டாம்பிள்ளை.
ஒரு வழியாக பிக்பாஸ் -3 ஆம் பகுதியின் முரட்டுக் குதிரைகள் இவர்கள்தான் என அடையாளம் காட்டி விட்டார்கள்.
முதல் கல்யாணத்தில் பிறந்த மகன் தன்னுடன் இல்லை என்பதை வனிதா கண்கலங்க சொன்னாலும் உருக முடியவில்லை.
“போத்திஸயே வாங்கித்தாரேன்மா” என்று சொன்ன அந்த மகன் இப்ப அப்பாவிடம் வளர்கிறான். சரி அந்தகதை எல்லாம் நமக்கெதுக்கு.!
ஊமக்குசும்புன்னு கேள்விப் பட்டிருப்பீங்க.அது அப்படியே வித்யாவிடம் இருக்கு. மீரா மிதுன் பின் பக்க ஹூக் போடச்சொன்ன மேட்டரை வைத்துக் கொண்டு வனிதா இழுத்த வம்புச்சண்டைதான் நேற்றைய பிக்பாசின் அடாவடித்தனம். வயசான வைத்யா பின் பக்கத்து ஹூக்கை பேத்திக்கு போட்டிருக்க மாட்டாரா என்ன…?அந்த தாத்தாவும் தன்னை அப்பான்னு சொன்னதற்காக இன்னிக்கி வம்புக்கு வரப்போறார். நல்ல காமடி பீஸ்தான்!
“இங்க ஏன் வந்தே போகவேண்டியதுதானே உங்க அப்பா அம்மா வீட்டுக்கு?” என்று மீரா மிதுனை மிரட்டிய வனிதாவைப் பார்த்தால் குழாயடி சண்டையும் தோத்துப் போகும். அப்பா வீட்டுக்குள் போக முடியாத ஆதங்கமோ என்னவோ வனிதாவுக்கு!
“உன் போதைக்கு நான் ஊறுகா ஆக முடியாது” என்று வனிதா சொன்னதைப் பார்த்தால் அந்த வசதி கூட பிக்பாஸில் செய்து கொடுக்கிறார்களா என நினைக்கத் தோன்றியது.