சென்னை,அக்,18,
தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை7 மணிக்கு சென்னை மைலாப்பூர் புனித எப்பாஸ் பள்ளியில் தொடங்கியது.ரஜினிகாந்த்,விஜய் சரத்குமார் நாசர்,விஷால் ,ராதாரவி,விஜய் உள்பட நடிகர் நடிகையர் வரிசையில் நின்று வாக்களித்தனர்.வாக்கு மையத்தில் போலிசாரால் மூன்று அடுக்கு பாது காப்பு போடப்பட்டுள்ளது
தென்னிந்திய நடிகர்கள் சங்கத்துக்கான நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை நடைபெறுவது வழக்கம் . அதன்படி, 2015 முதல் 2018-க்கான புதிய நிர்வாகிகளைத் தேர்வு செய்யும் தேர்தல் இன்று சென்னை மயிலாப்பூரில் உள்ள செயின்ட் எப்பாஸ் மெட்ரிகுலேஷன் உயர்நிலைப் பள்ளியில் தொடங்கியது. காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு மாலை 5 மணி வரை தேர்தல் அதிகாரியான ஓய்வு பெற்ற நீதிபதி ஈ.பத்மநாபன் தலைமையில் நடந்தது. இத் தேர்தலில் நடிகர் சரத்குமார் தலைமையிலான அணியினரும், நடிகர் நாசர் தலைமையிலான அணியினரும் போட்டியிடுகின்றனர்..தலைவர் பதவிக்கு சரத்குமார், நாசர் இருவரும் போட்டியிடும் நிலையில் சிவசாமி என்பவரும் தலைவர் பதவிக்கான போட்டியில் உள்ளார். ரஜினிகாந்த் ,சரத் குமார் , நாசர் ,ராதாரவி,விஷால்,பொன்வண்ணன் ,எஸ்.எஸ்.ஆர் கண்ணன், விஜயகுமார் , ,கார்த்தி,சிம்பு,ராதிகா,பசுபதி,சாந்தனு சங்கீதா ,சீதா கருணாஸ், விக்ராந்த், சசிகுமார், சமுத்திரகனி கார்த்திக்,விஜய்,.சிவ கார்த்திகேயன்,ஜீவன் நிரோஷா,கோவை சரளா ,ஜேப்பியார்,ராமராஜன், உள்பட அனைவரும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர்.மன்சூரலிகான் அடிப்படை உறுப்பினர் பதவியை விட்டு நீக்கப்பட்டுள்ளதால் அவர் வாக்கு அளிக்க தேர்தல் அதிகாரி தடை விதித்தார்.
துணைத் தலைவர்கள் பதவிக்கு நாசர் அணியின் சார்பில் கருணாஸ், பொன்வண்ணன் ஆகியோரும் , சரத்குமார் அணியின் சார்பில் விஜயகுமார், சிம்பு இருவரும் போட்டியிடுகின்றனர். இதைத் தவிர, மோகன்குமார் என்ற சுயேச்சை வேட்பாளரும் போட்டியில் உள்ளார்.
பொதுச் செயலாளர் பதவிக்கு ராதாரவி, விஷால் இருவரும் போட்டியிடும் நிலையில் தலைவர் பதவிக்கு சுயேச்சையாக போட்டியிடும் சிவசாமி, பொதுச் செயலாளர் பதவிக்கும் போட்டியிடுகிறார். பொருளாளர் பதவிக்கு எஸ்.எஸ்.ஆர்.கண்ணன், கார்த்தி இருவரிடையே போட்டி நிலவுகிறது.
இதைத் தவிர குட்டி பத்மினி, பிரசன்னா, ராஜேஷ், கே.ஆர். செல்வராஜ், ராம்கி, நளினி, நந்தா, விக்னேஷ்,பூச்சி முருகன் உள்ளிட்ட 48 பேர் செயற்குழு உறுப்பினர் பதவிக்கு போட்டியிடுகின்றனர்.தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்களுக்கான வாக்குச் சீட்டு எண் (சின்னம்) ஒதுக்கப்பட்டுள்ளது. தலைவர் பதவிக்குப் போட்டியிடும் சரத்குமாருக்கு ‘2’ என்ற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. மற்றொரு அணியின் சார்பில் தலைவர் பதவிக்குப் போட்டியிடும் நாசருக்கு ‘1’ என்கிற சின்னம் ஒதுக்கப்பட்டுள்ளது. பொதுச் செயலாளர் பதவிக்குப் போட்டியிடும் வேட்பாளர்களில் ராதாரவிக்கு ‘1’ என்ற சின்னமும், நடிகர் விஷாலுக்கு ‘3’ என்ற சின்னமும் ஒதுக்கப்பட்டுள்ளது.
இச் சங்கத்தில் சுமார் 3,139 உறுப்பினர்கள் உள்ளனர். இதில் 2,205 பேர் வாக்களிக்க தகுதியானவர்கள் என கண்டறியப்பட்டுள்ளது. சரத்குமார் அணி, நாசர் அணி, சுயேச்சைகள் உள்ளிட்ட 61 வேட்பாளர்கள் களத்தில் உள்ளனர். காலை முதலே நடிகர், நடிகைகள்,மதுரை, புதுக்கோட்டை, சேலம்,திருச்சி ஆகிய இடங்களில் இருந்து வந்திருந்த(1,175) நாடக கலைஞர்களும் ஆர்வமுடன் வரிசையில் நின்று வாக்களித்தனர். முன்னதாக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டிருந்தன.ஏராளமான போலீசார் குவிக்கப்பட்டிருந்தனர் வாக்குப்பதிவு முழுவதும் வீடியோ பதிவுகளாக்கப்பட்டது .மொத்தம் 24 கண்காணிப்பு கேமிராக்கள் பொருத்தப்பட்டு டி.வி.மூலம் ஒளிப்பரப்பும் செய்யப்பட்டது. இன்று மாலையே வாக்கு எண்ணிக்கை நடத்தி முடிவுகள் அறிவிக்கப்படும்.முன்னதாக மொத்தம் 1,163 தபால் வாக்குகளில், பதிவான வாக்குகள் 783. செல்லாத வாக்குகள் 43. என தேர்தல் அதிகாரி தெரிவித்தார்.