கதை இயக்கம்.: முத்துக்குமரன் .வசனம்: யோகிபாபு, முத்துக் குமரன், ஒளிப்பதிவு:மகேஷ் முத்துசாமி, பாடல்கள்” யுகபாரதி, இசை:ஜஸ்டின் பிரபாகரன்,தயாரிப்பு:ஸ்ரீவாரி.
ராதாரவி, யோகிபாபு,சாம் ஜோன்ஸ்,ஜனனி, ரமேஷ் திலக்,மொட்டை ராஜேந்திரன்,அழகம் பெருமாள்,மேக்னா
***********
“சொர்க்கத்துக்குப் போறேனோ,நரகத்துக்குப் போறேனோ, டோன்ட் ஒர்ரி! உயிரோட இருக்கிறப்பவே எல்லாத்தையும் அனுபவிச்சிடனும்.செத்த பிறகு எங்கே போறேன்னு முழிச்சி முழிச்சி பாத்திட்டு இருக்கப்போறேனா …அடிடா கொள்ளை மக்கள் பணத்தை.! அதுக்குத்தான் அரசாங்கத்தை கொடுத்திருக்காய்ங்க. அதுவும் ஓட்டுப்போட்டு!”
“என்னடா திடீர்னு சொர்க்கம் நரகம்னு?”
“மாப்ள.! தர்மபிரபு சினிமா பாத்தேன். சட்டத்துறை மந்திரி வீடு. கையில சரக்கு கிளாஸ். சுதி ஏத்திட்டு இருக்காரு. மப்புல கெத்தா பேசிக்கிறாரு…’சென்டர்ல பவர் இருக்கும் வரை அந்த எமனால கூட புடுங்கமுடியாது’ன்னு சொன்னதும் மண்டை மேல சுவத்துல மாட்டி இருந்த எருமைத் தல விழுந்து ஆள் காலி…நேரா எமனோட கோர்ட்டுல நிக்கிறார் சட்டத்துறை மந்திரி.! அங்கதான் சொர்க்கம் நரகம்னு இருக்கிறத காட்டுனாங்க.”
“அதனாலதான் அப்படி சொன்னியா..சரி யோகிபாபு லீடு ரோல்ல நடிச்ச படம்தானே எப்டி இருக்கு?”
“ராதாரவிதான் தர்மராஜா.அதாவது எமன். ஒர்க் லோடு அதிகம்.!வயசு ஓவர் !.அதனால மகன் தர்மபிரபு யோகிபாபுவுக்கு பட்டம் சூட்டிட்டு ஒதுங்கிட்டாரு. ராதாரவி ரிட்டையர் ஆனா அந்த பதவிக்கு வரணும்னு ஆசைப்பட்ட சித்ரகுப்தன் ரமேஷ் திலக்குக்கு ஏமாத்தம்.அதுனால அவர் செய்ற சதி ,தமிழ்நாடு, இந்திய அரசியல் இப்படி எல்லாத்தையுமே வச்சு வச்சு செஞ்சிருக்காய்ங்க!”
“அப்டியா?”
“முதல் ,துணை முதல்வரு ,குடும்ப அரசியல்,சாதி அரசியல்னு ஒருத்தனை பாக்கி வைக்கல. நாரு நாரா கிழிச்சு ,நச்சு கந்தலாக்கிட்டாய்ங்க.!நடிப்புங்கிறத விட டயலாக்ல தான் கவனம் இருந்திருக்கு.
“வேற என்ன ?”