தமிழ்த் திரைப்பட இயக்குனர்கள் சங்கத்தின் தலைவராக போட்டியின்றி இயக்குநர் இமயம் பாரதிராஜா தேர்வு செய்யப்பட்டார்.
அரங்கம் அதிர கரவொலி எழுப்பி வரவேற்றார்கள்.
பாரதிராஜா இயக்குநர் ஆனார் .
அவரே விரும்பி அப்போது ஏற்றுக் கொண்ட தலைவர் பதவியை தற்போது ராஜினாமா செய்திருக்கிறார்.
காரணம் என்ன?
“காலம் பேசாது,காலம்தான் பதில் சொல்லும் “என உளறிக் கொட்டுகிற அளவுக்கு சிந்திக்கிற ஆள் இல்லை .பாரதிராஜா!
இயக்குநர்கள் சங்கத்தில் என்ன நடக்கிறது?
இயக்குநர் சேரன் பேசியதை மறந்து விட முடியாது.
“அவரை (பாரதிராஜா.) சிலர் சதி செய்து இயக்குநர்கள் சங்கத்திற்கு தலைவராக்கி விட்டார்கள். அவர் அங்கிருக்க வேண்டியவர் இல்லை. தமிழ்த் திரைப்படத் தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக அமரவேண்டியவர் பாரதிராஜா!” எனப் பேசியதை மறந்து விடமுடியாது.
சேரன் இன்று பிக்பாஸ்க்குள் சிறைப்பட்டிருப்பதால் அவருடன் தொடர்பு கொள்ள இயலாது. ஆனால் அன்று சேரன் பேசியதுதான் செயல்பட்டு பாரதிராஜாவை பதவி விலக வைத்திருக்கிறது.
தயாரிப்பாளர்கள் சங்கத்தின் தலைவராக இல்லாமலேயே கியூப் பிரச்னை, உள்ளிட்ட பல முக்கிய பிரச்னைகளை தீர்த்து வைத்திருக்கிறார் பாரதிராஜா.
ஆக செயல்படுகிற தலைவராக இருப்பதால் அவரை தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவராக அதிகாரபூர்வமாக தேர்வு செய்வதற்காகவே இயக்குனர்கள் சங்கத்தில் இருந்து விலகி விட்டார் என நினைக்கத் தோன்றுகிறது.