அக்கினி நட்சத்திரம் விடை பெற்றுப் போய் விட்டாலும் வெயிலின் கடுமை கொடுமையாகவே இருக்கிறது.
மழையும் சென்னையை முழுமையாக நனைக்கவில்லை.
அங்கொன்று இங்கொன்றும் நனைத்து சூட்டைக் கிளப்பி இருக்கிறது.
நல்லாட்சி நடந்தால் மழை பெய்யும் என்பார்கள்,
நடக்கவில்லையோ என்னவோ…எவனோ கடத்திக் கொண்டு போய் விட்டான்.
குடிக்கவும் தண்ணீர் இல்லை. குளித்தே பல நாட்கள் ஆனவர்கள் உடம்பில் பவுடரைப் பூசிக்கொண்டு சமாளிக்கிறார்கள்.
ஆனால் கோடீஸ்வரர்களுக்கு அப்படி இல்லை. சூப்பர் ஸ்டார் ரஜினி போன்றவர்களுக்கு அரசாங்கம் அலறிக்கொண்டு வந்து தண்ணீர் கொடுக்கும்.
அவர்களது குடும்பத்தினர் நீச்சல் குளத்தில் நீந்துவது, மகிழ்வது மகராசிகள் எனத்தான் சொல்லவேண்டும். நீச்சல் குளத்தில் நீச்சல் உடையில்தான் இருக்க முடியும்.
அதைத்தான் ரஜினியின் மகள் சவுந்தர்யா விசாகன் செய்திருக்கிறார். கூடவே மகனும்.
தப்பே இல்லை.கூந்தல் உள்ள சீமாட்டி.
இப்படி குளிப்பது தவறு என்று சொன்னால் நட்சத்திர ஹோட்டல்களில் உள்ள நீச்சல் குளத்தை மூடச்சொல்லுங்கள்.
அறிவுக்குப் பொருத்தமாக எதிர்ப்பு இருக்க வேண்டும்.