கதை இயக்கம்.: சற்குணம், இசை.:நடராஜன்,சங்கரன், ஒளிப்பதிவு,:வேல்ராஜ்,
விமெல்,ஓவியா,சரண்யா,இளவரசு,கஞ்சா கருப்பு ,விக்னேஷ்காந்த்,
*************
ஏழெட்டு வருஷங்களுக்கு முன்னாடி வந்த களவாணி படத்தின் இரண்டாம் பாகம். சில கேரக்டர்களைத் தவிர மத்த கேரக்டர்கள் எல்லாம் புதுசு.
அறிக்கி என்ற அறிவழகன் விமெல் அவ்வளவாக வித்தியாசம் தெரியல.முதல் படம் மாதிரியே மாடுலேஷன்,பாடி லாங்குவேஜ் அப்படியே இந்த படத்திலும் தொடர்கிறது.பாவிமகன் பாடு பட்டிருக்கிறார்.ஆனால் பலன் இல்லையே!
இணையாக வருகிற ஓவியா காதலில் கசியவும் இல்லை., திறமையாக எதையும் செய்து விடவில்லை. வந்த அளவுக்கு ,வாங்கின சம்பள அளவுக்கு செய்தால் போதும் என்று நினைத்து விட்டாரோ என நினைக்கத்தோன்றும். ஆனால் அவருடைய கேரக்டர் வலிமையானதாக இல்லை.
சரண்யா பொன்.வண்ணன், இளவரசு இருவர் மட்டுமே இந்தக் கதையின் இயல்பான ஆத்திரம்,உருக்கம்,பாசம் வெளிப்படுத்தியிருக்கிறார்கள்.
காமடியில் மயில்சாமி,கஞ்சா கருப்பு இருவர் மட்டும்தான் ஓரளவுக்கு நகைக்கவைக்கிறார்கள்.
விக்னேஷ்காந்த் யாருடைய சிபாரிசிலோ இடத்தை பிடித்து நடித்து ( ? ) வந்து கொண்டிருக்கிறார் என்பது இந்த படத்திலும் தெரிகிறது. வேஸ்ட்
சலங்கைகள் பரதம் ஆடும் பெண்ணின் கால்களில்தான் கட்டப்பட்டிருக்க வேண்டும். வேல்ராஜின் அற்புதமான படப்பிடிப்புக்கு உகந்த கதை இது இல்லை.
கழுத்து ,இடுப்பு இரண்டும் வலியெடுக்க பார்த்த படம்.!