அசுரகுரு படத்தின் இசை வெளியீட்டு விழாவில் கலைப்புலி தாணு, எடிட்டர் மோகன், பாக்யராஜ், அருண் பாண்டியன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு வாழ்த்தினார்கள்,
விக்ரம்பிரபு மகிமா நம்பியார் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிற இந்த படத்தின் இயக்குநர் ராஜ்தீப் இயக்குநர் ராஜாவிடம் இணைந்து பணியாற்றியவர். இவருக்கு முதல் படம். மற்றொரு விழாவில் கலந்து கொள்ள வேண்டியது இருந்ததால் தாணு முதலில் பேசிவிட்டு சென்று விட்டார்.
பாக்யராஜ் பேசினால் பிரஸ்சுக்கு ஏதாவது மாட்டும் என்கிற நம்பிக்கையில் காத்திருந்தவர்களை அவர் ஏமாற்றவில்லை.
திமுக இளைஞர் அணியில் முக்கிய பொறுப்பேற்றிருக்கும் நடிகர் உதயநிதி ஸ்டாலின் பெயரை சொல்லாமலேயே தனது கருத்தை சொல்லிவிட்டார்.
“சினிமா உலகில் நடிகர்களின் வாரிசுகளுக்குத்தான் வாய்ப்புகள் கிடைப்பதில்லை. பாண்டிராஜின் மகன்,என்னுடைய மகன் போன்ற வாரிசு நடிகர்களுக்கு சான்ஸ் கிடைப்பதே அரிதாக இருக்கிறது.சிபாரிசு பண்ணினாலும் எடுபடாது. ஆனால் அரசியலில் வாரிசுகள் சுலபமாக உயரத்துக்கு வந்து விடுகிறார்கள்.
நான் யாரையும் குறிப்பிட்டு சொல்லவில்லை.தலைப்பு செய்தி ஆக்கி விடாதீர்கள்” என்றார் பாக்யராஜ்.