வெள்ளிக்கிழமை காலை ஆடை படத்தின் முன்னோட்ட வெளியீட்டு விழா நடந்தது. கறுப்புக் கலரில் கை இல்லா ஆடையில் அமலாபால் கவர்ச்சிகரமாக வந்திருந்தார். சற்றே இளைத்திருந்தார்.
செயற்கை உபகரணங்களும் மைனஸ்.
இயல்பான முடி அலங்காரமும் இல்லை.
தமிழ்ச்சினிமா விழாக்களுக்கு பெரிய நடிகைகள் வருவதில்லை என்கிற இழிவான மரபினை உடைத்துக் கொண்டு வந்திருந்தார்,இவருடன் ரம்யா சுப்பிரமணியம்,ஸ்ரீ ரஞ்சனி இயக்குநர் ரத்னகுமார்,தொழில்நுட்ப கலைஞர்களான விஜய்கார்த்திக் கண்ணன்,பிரதீப்குமார், ஊர்கா ஆகியோரும் வந்திருந்தார்கள்.
கேள்வி பதில் செஷனுக்கு இடமில்லாமலேயே விழாவை சாமர்த்தியமாக முடித்து விட்டார்கள்.
அமலாவின் முன்னாள் கணவர் இயக்குநர் ஏஎல்.விஜய்யின் மறுமணம் தொடர்பான கேள்விகளுடன் பலர் காத்திருந்தார்கள்.
அமலா பால் ஓரளவு மனம் விட்டுத்தான் இன்று பேசியதாகத் தெரிந்தது.
“கதை சொல்ல வர்றவங்க,பெண்ணை கெடுத்திட்டாங்க,அந்த பெண் அவங்களை எப்படி ரிவன்ஜ் எடுக்கிறா என்பது மாதிரியான கதைகளைத்தான் சொல்லி வருகிறார்கள்.கிட்டத்தட்ட பத்து கதை இதே டைப்தான்!
இதானால் வெறுத்துப்போன நான் சினிமாவுக்கு குட்பை சொல்லலாம்னு என் மேனேஜரிடம் சொன்னது உண்டு. அந்த சமயத்தில்தான் இந்த ‘ஆடை’ கதையின் சினாப்சிஸ் எனக்கு கிடைத்தது.
நல்ல கதையாக இருக்கே! டைரக்டரை வரசொன்னேன்.
தாடி மீசை நீண்ட முடி இம்மாதிரியாக வந்தார் .கதை ரெண்டு மணி நேரம் சொன்னார் பிடிச்சுப் போச்சு.
ஆனால் அவருடைய உருவத் தோற்றத்தைப் பார்த்ததும் டவுட். இந்தி அல்லது இங்கிலீஸ் படங்களில் இருந்து சுட்டிருப்பாரோன்னு!
இங்கிலீஸ் படத்தின் ரீமேக்கா என்று கேட்டேன்.
அய்யயோ அதெல்லாம் இல்ல மேடம்னதுதான் ஒத்துக் கொண்டேன் “என்றார் அமலாபால். இந்த படத்தின் டீசரில் சற்றே போதையில் அமலா ஒரு கேள்வி கேட்பார் பிரண்ட்ஸ்களிடம்.!