நாளைக்கு ஒரு புது கேம் என வாலிப வட்டம் அறிமுகம் செய்கிறது
அந்த வகையில் ‘பாட்டில் கேப் சேலஞ்ச்’ என ஒரு விளையாட்டு. காலால் பாட்டில் மூடியை திறக்க வேண்டும்.
நாட்டில் எத்தனையோ,எவ்வளவோ பிரச்சினைகள், சிக்கல்கள் என தலைவிரித்தாடும் நிலையில் செல்லப் பிள்ளைகள் இத்தகைய விளையாட்டுகளில் ஆர்வம் காட்டுகிறார்கள்.
ஆக்சன் கிங் அர்ஜுன், அக்சய்குமார் ஆகியோர் இந்த விளையாட்டில் வெற்றி பெற்று மேலும் ட்ரென்ட் ஆக்கியிருக்கிறார்கள்.
நயன்தாராவின் காதலர் இயக்குநர் விக்னேஷ் சிவனுக்கு இந்த விளையாட்டில் ஜெயிக்க வேண்டும் என்கிற ஆசை.
காதலியை செல்போனில் படம் பிடிக்கச் சொல்லிவிட்டு காலை எப்படியெல்லாமோ தூக்கிப் பார்த்து எய்ம் பண்ணுகிறார். கால் ஒத்துழைக்க மறுக்கிறது.
பல முறை முயன்றும் முடியாமல் போகிறது.
கையினால் பாட்டில் மூடியைத் திறந்து தனது கைத் திறமையை நிரூபித்திருக்கிறார்.
நெட்டிசன்கள் நையாண்டி மேளம் கொட்டி மரண கலாய் கலாய்க்கிறார்கள்.
“உனக்கெதுக்கு இந்த வேலையில்லாத வேலை?” “உனக்கு கிடைச்சிருக்காங்க பாரு நயன்தாரா” “நல்லா காலை தூக்கி அடி”
இப்படி பலவித நையாண்டிகள்.!