“ஆகஸ்ட் வந்தா என மக வேரோனிகாவுக்கு மூணு வயசு.! சந்தோஷமா இருக்கு!”என்கிற பாலிவுட் ஹீரோயின் மகி ஜில் மிக மிக மகிழ்ச்சியில் இருக்கிறார்.
“கல்யாணம் இன்னும் ஆகலியே?” என்றதற்கு,
“அதனாலென்ன…ஒரு பொண்ணுக்கு அம்மா என்பது பெருமையா இருக்கு. அம்மா ஆகிறதுக்கு எதுக்குய்யா கல்யாணம்?” என பதில் வருகிறது.
“எனக்கு எப்ப தோணுதோ அப்ப கல்யாணம் பண்ணிப்பேன். இப்ப என் மகளுக்கு வர்ற ஆகஸ்ட்டில் பெர்த்டே வருது.!குடும்பம்,குழந்தைகள்,இதெல்லாம் கல்யாணம் இல்லாமலேயே பெற முடியும்!” என்கிறார்.
“யம்மா….. மேரேஜ் மேல அவ்வளவு கோபமா?”
“கல்யாணம் அழகுதான்! ஆனா பண்ணிக்கலாமா,வேணாமா என்பது அவரவர் விருப்பம்” என்கிறார்.