தளபதி விஜய்யின் தீபாவளிப் படம் பிகில். அட்லி இயக்கத்தில் நயன் ஜோடி கட்டியிருக்கிற பிரமாண்டமான படம். ஏஜிஎஸ் தயாரிப்பு.
இன்று அந்த நிறுவனத்தின் முக்கிய அதிகாரியான அர்ச்சனா கல்பாத்தி ஒரு செய்தி வெளியிட்டிருக்கிறார்.
“தளபதி ரசிகர்களே!
இன்று (எட்டாம் தேதி ) மாலை ஆறு மணிக்கு உங்களுக்கு மிகப்பெரிய இன்ப அதிர்ச்சி காத்திருக்கிறது..
அது டீசரா.சிங்கிளா,டிரெய்லரா,ஆடியோ ரிலீஸ் தேதியா, படம் வரும் தேதியா அதெல்லாம் எதுவும் இல்ல.! அதுக்கும் மேலே! 6 மணி வரை காத்திருங்கள் “என அறிவித்திருக்கிறார்.
எதுவும் பரிசுத்திட்டம் அல்லது சீன் ஏதாவது, ரசிகர்களை திரட்டுவது…அட ஆறு மணி வரை வெயிட்டிங் லிஸ்ட்ல இருக்கட்டுமே!