இன்று காலை இயக்குனர்கள் சங்க பொதுக்குழு வடபழனி யில் உள்ள தியேட்டரில் நடந்தது.
பாரதிராஜா ராஜினாமா செய்து விட்டதால் 21 ஆம் தேதி தேர்தல் நடத்தி புதிய தலைவரை தேர்வு செய்ய இருக்கிறார்களாம்.
இதில் வேடிக்கை என்னவெனில் இமயத்தை வம்பில் மாட்டி வைத்தவரே ஆர்.கே.செல்வமணிதானாம்.ஆளுக்காள் செல்வமணியை வறுத்து விட்டதாகக் கேள்வி.!
தியேட்டரில் பல இயக்குனர்கள் என்ன பேசிக் கொண்டார் களோ அதைத்தான் இங்கு பதிவு செய்கிறோம்.
“விஷால் பேச்சைக்கேட்டு செல்வமணிதான் பாரதிராஜாவை இயக்குநர்கள் சங்கத்துக்குள் இழுத்து வந்தார். இமயத்தை தயாரிப்பாளர்கள் சங்கத்துப் பக்கமாக வராமல் பார்த்துக் கொள்ளுங்கள் “என விஷால் சொன்னதைக் கேட்டு அப்படி செய்து விட்டார். இமயமும் இது புரியாமல் தலைவராகி விட்டார். ஆக எல்லாத்துக்கும் காரணம் இந்த செல்வமணிதான்!”என பேசிக்கொண்டார்கள்
சுரேஷ்காமாட்சி உள்ளிட்ட பலர் பாரதிராஜாவிடம் சென்று “என்ன சார் இப்படி பண்ணீட்டிங்க.நீங்க தயாரிப்பாளர் சங்கத்துக்கு தலைவர் ஆகனும்னுதானே நாங்க பாடு படுறோம் .ஒருவர் இரண்டு பதவிகளில் இருக்கக்கூடாது என்பதற்காகத்தானே விஷாலை எதிர்த்தோம் .நீங்க இப்படி பண்ணிட்டிங்களே”என்று முறையிட்ட பின்னர்தான் சிங்கம் ராஜினாமா செய்திருக்கிறது.