எந்த நேரத்தில் இயக்குநர் இமயம் பாரதிராஜாவை செலக்ட் பண்ணி பிறகு ராஜினாமா செய்ய வைத்தார்களோ தெரியவில்லை. அங்கும் கோஷ்டிகள் கொடிபிடிக்க ஆரம்பித்திருக்கின்றன.
இயக்குநர் சங்கமா கேளிக்கை விடுதியா மதுப்பாட்டில்கள் கிடக்கின்றன என கரு.பழநியப்பன் சாட்டை எடுத்து வீசினார். (நாங்கள் எத்தனை டைரக்டர்களை கோப்பையுடன் பார்த்திருப்போம். இதென்ன புதிசா! ) தற்போது நான்கு பெரிசுகள் தலைவர் பதவிக்கு போட்டியிடுகின்றன. இதில் யார் வாபஸ் வாங்குவார் என்பது கடைசி நேரத்தில் தெரியவரும்.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்துக்கு 2 ஆண்டுக்கு ஒரு முறை தேர்தல் நடைபெறுவது வழக்கம்.
3000 உறுப்பினர்களைக் கொண்ட தமிழ்நாடு இயக்குநர் சங்கத்தில் 2,400 பேர் வாக்களிக்க தகுதி உள்ளவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
இச் சங்கத்தில், 1 தலைவர், 2 துணைத் தலைவர்கள், 1 பொதுச்செயலாளர் 4 இணைச் செயலாளர்கள் , 1 பொருளாளர், 12 செயற்குழு உறுப்பினர்கள்பதவிக்கு தேர்தல் நடக்க உள்ளது.
தற்போதைய நிர்வாகிகளின் பதவி காலம் முடிவடைந்ததையடுத்து வரும் 2019 – 2021ம் ஆண்டுக்கான தேர்தல் நடத்த, இயக்குனர் சங்கத்தின் கடந்த 99 வது பொதுக்குழுவில் முடிவெடுக்கப்பட்டது.
இக்கூட்டத்தில் தலைவராக இயக்குநர் பாரதிராஜா ஒருமனதாக தேர்ந்தெடுக்கப்பட்டதாக அறிவிக்கப்பட்டார்.மற்ற பதவிகளுக்கு வரும் 14-ம் தேதி தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது,
ஆனால்,பாரதிரா
இதனைத்தொடர்ந்து, 100வது அவசர சிறப்பு பொதுக்குழு கடந்த 8ம் தேதி கூட்டப்பட்டு, காரசார விவாதத்திற்கு பிறகு,தலைவர் உள்ளிட்ட நிர்வாகிகளின் பதவிகளுக்கு வரும் ஜூலை 21ல்தேர்தல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத்தின் தலைவர் பதவிக்கு வேட்புமனு தாக்கல் வரும் 10-ஆம் தேதி நடைபெறும்என்றும்,மற்ற பதவிகளுக்கு விண்ணப்பித்தவர்கள், தலைவர் பதவிக்கு விண்ணப்பிக்கலாம் என்றும், மனுக்களை திரும்ப பெற 12-ம் தேதி கடைசி நாள் என்றும்,வரும் ஜூலை 13-ல் இறுதிப்பட்டியல் வெளியிடப்பட்டு என்றும், வரும் 21-ம் தேதி வடபழனி திரைப்பட இசைக்கலைஞர்கள் சங்க வளாகத்தில் தேர்தல் நடைபெறும் என்றும்,அறிவிக்கப்பட்டது.
,இன்று யாரும் எதிர்பாராத வகையில்,இயக்குனர் சங்கத்தலைவர் பதவிக்கு இயக்குனர்கள் பி.வாசு,எஸ்.பி.ஜனநாதன்,கே.எஸ்.
இதனால் இயக்குனர் சங்கத்தலைவர் பதவிக்கு பலத்த போட்டாபோட்டி ஏற்பட்டுள்ளது.