தென்னிந்திய நடிகர் சங்கத் தேர்தல் இன்று காலை நடந்ததுமொத்தம் 3,139 உறுப்பினர்கள் உள்ள இச் சங்கத்தில்,இன்று நடந்த வாக்குப்
பதிவில்,மொத்தம் 2,607 வாக்குகள் பதிவாகின.நேரடியாக 1,824 வாக்குகளும், தபாலில் 783 வாக்குகளும் பதிவாகியது. நடிகர் சங்க வரலாற்றிலேயே
இம்முறை தான் மிகவும் அதிக பட்சமாக,83 சதவீதமாக பதிவாகியுள்ளது. ,இன்று காலை ஏழு மணிக்கு தொடங்கிய தேர்தல் பல்வேறு வாக்கு
வாதங்கள்,தள்ளு முள்ளு மற்றும் உச்ச நடிகர்களால் நடிகர் சங்கப் பெயர் மாற்றம் தொடர்பான சர்ச்சைகள்,என எல்லாவற்றையும் கடந்து ஒரு
வழியாக மாலை 5 மணிக்கு முடிந்தது. இதையடுத்து மாலை 6.30 மணியளவில் தேர்தல் அதிகாரி நீதியரசர் பத்மநாபன் தலைமையில்வாக்கு என்னும்
பனி பலத்த போலிஸ் பாதுகாப்புடன் தொடங்கியது. முதலில் தபால் வாக்குகள் எண்ணப்பட்டன .பதிவான 783 வாக்குகளில், இரவு 8 மணி நிலவரப்படி, தபால் வாக்கு எண்ணிக்கையில் சரத்குமார் அணி முன்னிலை வகித்தது. ஆனால் சென்னை வாக்குகளை எண்ணிய போது, பொதுச் செயலாளர் பதவிக்கு போட்டியிட்ட விஷால் 1,445 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்து போட்டியிட்ட ராதாரவி 1138.வாக்குகள் பெற்று தோல்வியடைந்தார் .தலைவர் பதவிக்கு போட்டியிட்ட நாசர் 1,145 வாக்குகள் பெற்று முன்னணியில் உள்ளார்.சரத்குமார் 1,231 பெற்று பின் தோல்வியடைந்தார்…பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி 1,493 பெற்று வெறி பெற்றார்,எஸ்.எஸ்.ஆர் கண்ணன்1,080 பெற்று பின்தங்கியுள்ளார்.விஷால் அணியினர் அமோக வெற்றி பெற்றுள்ளனர்..பொருளாளர் பதவிக்கு போட்டியிட்ட நடிகர் கார்த்தி 1,384பெற்றுவெற்றி பெற்றுள்ளார். உள்ளார் ,எஸ்.எஸ்.ஆர் கண்ணன் 1031 பெற்று தோல்வியடைந்தார்.