தாலி கட்டின பொண்டாட்டிக்கு தெரியாததெல்லாம் ‘சில’ பேனாக்காரர்களுக்கு தெரிகிறது.
நேர்கொண்டபார்வை படத்துக்குப் பிறகு ஒரு ஆக்சன் படத்தில் நடிப்பதற்கு ஒப்புக்கொண்டிருக்கிறார் தல அஜித் என்பது எல்லோருக்கும் தெரிந்த சங்கதி.
இப்ப புதுசா கிளம்பி இருக்கிற சேதி போனிகபூரின் 3 படங்களில் தல நடிக்க ஒப்புக்கொண்டிருக்கிறார் ,அந்த மூணு படங்களுக்கும் 100 கோடி சம்பளம் வாங்கி இருக்கிறார் என்பதுதான்!
இந்த சேதிய பார்த்துவிட்டுப் பதறிப்போன போனிகபூர் “அப்படியெல்லாம் இல்லிங்க. நேர்கொண்ட பார்வைக்குப் பிறகு ஒரு படம் பண்றார்.அவ்வளவுதான்,.அவர் ஒரு இந்திப்படம் பண்ணினா நல்லதுன்னு சொன்னோம்.அவர் பதிலே சொல்லலே.நல்ல மனிதர்.”என்று சொல்லியிருக்கிறார்.
அந்த நூறு கோடி ?
ஊருக்கே தெரியும் தல ஒரு படத்துக்கு மட்டும் எவ்வளவு சம்பளம் வாங்குகிறார் என்பது?