தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கத் தேர்தல் வரும் 21-ம் நடைபெறுகிறது.
இயக்குனர் சங்க தலைவர் பதவிக்கான தேர்தலில் போட்டியிட இயக்குனர்கள் ஆர்.கே.செல்வமணி ,ரத்தன் கணபதி,சி.வி.வித்யாசாகர் எஸ்.பி.ஜனநாதன்,அமீர் உள்ளிட்ட 5 பேர் மனுதாக்கல் செய்திருந்தனர்.
இந்நிலையில் இயக்குனர் சங்கத் தேர்தல் விதி எண் 20ன்படி , இயக்குனர் அமீர் விதியை மீறி தலைவர் பதவிக்கு போட்டியிடும் எஸ்.பி.ஜனநாதனுக்கு முன் மொழிதல் செய்திருப்பதால், அமீர் மற்றும் ஜனநாதன் வேட்புமனு நிராகரிக்கப்பட்டதாக தேர்தல் நடத்தும் அதிகாரி செந்தில்நாதன் அறிவித்தார்.
இதையடுத்து தேர்தல் அதிகாரி விதிமுறைகளை மீறி செயல்படுவதாக குற்றம் சாட்டி இயக்குனர் அமீர் அணிஇப்போட்டியிலிருந்து விலகுவதாக அறிவித்துள்ளது.