குளியல் தொட்டியில் நிறை போதையில் ஸ்ரீ தேவி இறந்து போனார் என்பதாக முடிவு செய்யப்பட்ட மர்மம் நிறைந்த சம்பவம் இன்னும் முடிவுக்கு வந்தபாடாக இல்லை. அவர் இறந்தபோதே பலவித சந்தேகங்கள் கிளம்பின.
அரசாங்க ஆதரவு ,செல்வாக்குள்ளவர்களின் தலையீடு என்றெல்லாம் பேசப்பட்டது.
மறக்கப்பட்ட ஸ்ரீ தேவியின் மரணத்தில் கேரளத்தின் டி.ஜி.பி.ரிஷிராஜ் ஒரு சந்தேகத்தை கிளப்பியிருந்தார்.ஒரு அடி ஆழமுள்ள குளியல் தொட்டியில் எவ்வளவுதான் மது அருந்தி இருந்தாலும் மூழ்க முடியாது.யாராவது தலையை அழுத்தி கொன்று இருக்கவேண்டும் என்று தன்னிடம் தடய இயல் வல்லுநர் உமாநாதன் சொன்னார் என்பதாக சொல்லியிருந்தார்.
இதைப்பற்றி ஸ்ரீ தேவியின் கணவர் போனிகபூரிடம் கேட்டபோது “முட்டாள்த் தனம் .இதெற்கெல்லாம் நான் பதில் சொல்லவேண்டிய அவசியம் இல்லை.கட்டுக்கதைகள் வரத் தான் செய்யும்“என்று ஆத்திரமுடன் சொன்னார்.