உணர்வு …சுமன் நடித்திருக்கிற படம்.
இந்த படத்தில் அவர் முதலமைச்சராக நடித்திருக்கிறார்.
“வாழ்க தமிழ்,வாழ்க தமிழ்நாடு, வாழ்க தமிழ்ச்சினிமா” என பேசத் தொடங்கியதும் மகிழ்ச்சியாக இருந்தது.
பிற மாநிலத்தவர் என்றாலும் நமது மாநிலத்தில் வளர்ந்து சென்றவர். நன்றி மறக்காமல் இருக்கிறாரே !
“முதலமைச்சாராக இருந்தாலும் அவருக்கு இருக்கிற மேலிடத்து அழுத்தம், கட்சி அழுத்தம் ,ஒரு திட்டத்தை அறிவித்து விட்டு பின்னர் அவரே திரும்பப் பெறக்கூடிய நிர்பந்தம் இவைகளை இந்தப் படத்தில் சொல்லியிருக்கிறார்கள் அவர்க்கு இருக்கிற சாதக பாதகங்களை சொல்லியிருக்கிறார்கள் ” என்றார். முப்படையைச்சேர்ந்த முன்னாள் ராணுவ வீரர்களுக்கு வீடுகள் கட்டிக்கொள்வதற்கு 120 ஏக்கரா நிலத்தை ஆந்திராவில் இலவசமாக சுமன் வழங்கி இருக்கிறார்.