நடிகர் விஜய் தேவரகொண்டா கொச்சி,பெங்களூரு சென்னை ஆகிய பெரு நகரங்களில் ‘ டியர் காம்ரேட் ‘ என்கிற இசை நிகழ்ச்சி நடத்தினார். எல்லாம் இலவசம்.என்றதும் தாங்க முடியாத கூட்டம் கொச்சி,பெங்களூருவில்.
நிகழ்ச்சியை ஏற்பாடு செய்தவர்கள் திணறிப் போனார்கள். கொச்சியில் ரசிகர்களின் ரகளை தாங்க முடியாமல் போனதால் போலீசார் தடியடி நடத்த வேண்டியதாயிற்று. பலருக்கு காயம்.
தகவல் தெரிந்து வெளியில் வந்த விஜய்க்கு கூட்டத்தைப் பார்த்து அதிர்ச்சியாகி விட்டது.
இவ்வளவு பெரிய கூட்டத்தைக் கூட்டியவர்கள் போதுமான ஏற்பாடு செய்திருக்க வேண்டாமா? டோஸ் விட்டார்.
ஒரு பக்கமாக அழுது கொண்டிருந்த ரசிகையை பார்த்ததும் அவரை அருகில் அழைத்து ஆறுதல் சொன்னார்.