‘கொலைகாரன்’. படத்தில் கதா நாயகியாக நடித்தவர் ஆஷிமா நர்வால். இவர் மிஸ் ஆஸ்திரேலியா பட்டம் வென்றவர்.
இவர் யார்?
‘பிறந்தது இந்தியா. படிச்சது ஆஸ்திரேலியா. படிக்கும் போது விஞ்ஞானியாக வேண்டும் என்று கனவு கண்டேன். ஓவியம் போன்ற கலை சார்ந்த விஷயங்கள் பிடிக்கும் என்றாலும் நான் நடிகையாவேன் என்று ஒருபோதும் நினைத்ததில்லை.
பாலிவுட்டிலிருந்து சினிமா வாய்ப்பு வந்தது. பாலிவுட் வாய்ப்பு என் எதிர்பார்ப்புக்கு ஏற்ற மாதிரி இல்லாததால் அந்த வாய்ப்பை நிராகரித்துவிட்டேன். அதன் பிறகு தெலுங்கில் ‘நாடகம்’ படத்தின் மூலம் அறிமுகம் கிடைத்தது. அடுத்து வெளிவந்த் ‘ஜெர்ஸி’ படமும் பெரிய ஹிட். அந்தப் படத்துக்கு பிறகு வெளிவந்தப் படம் தான் ‘கொலைகாரன்’. இந்த மூன்று படங்கள் மூலம் ஹாட்ரிக் அடித்ததில் மகிழ்ச்சி.
‘கொலைகாரன்’ அனுபவம்?
‘கொலைகாரன்’ என்னுடைய கேரியரில் அது பெரிய படம். படத்தில் நாயகியை எடுத்துவிட்டு பார்த்தால் படம் முழுமை அடைந்திருக்காது. அர்ஜூன், விஜய் ஆண்டனி, நாசர், சீதா போன்ற பெரிய நடிகர்களுடன் நடித்தது நல்ல அனுபவம். அவர்களுடைய சினிமா அனுபவம் எனக்கு உதவியாக இருந்தது.
அடுத்து?
‘ராஜ பீமா’ படத்தில் ஆரவ் ஜோடியாக நடிக்கிறேன். இந்தப் படம் மனிதனுக்கும் விலங்கிற்குமிடையே உள்ள நட்பை பேசும் படமாக இருக்கும்.
படத்துல எனக்கு டாக்டர் கேரக்டர். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.
படத்துல எனக்கு டாக்டர் கேரக்டர். நரேஷ் சம்பத் இயக்கியுள்ளார்.
ஒரு காட்சியில் ஆரவ்வை என் பக்கமாக நானும் தன் பக்கமாக யானையும் இழுக்க வேண்டும். கிட்டத்தட்ட பலப்பரீட்சை மாதிரி. அந்தக் காட்சியில் நான் இழுத்த மாதிரி காட்சி அமைய வேண்டும். ஆனால் யானை நிஜமாக தன் பக்கமாக ஆரவ்வை இழுக்க ஆரம்பித்த போது பதறிவிட்டோம்.
உங்கள் பொழுதுப்போக்கு?
இண்டிரீயர் டிசைனிங் துறையில் எனக்கு ஆர்வம் அதிகம். மருத்துவமனை, வீடு என்று பல இடங்களில் இண்டிரீயர் பண்ணியிருக்கிறேன். தவிர, பர்னிச்சர் பிசினஸ் பண்றேன். விரைவில் டூரிசம் சார்ந்த பிசினஸ் பண்ணப் போறேன்.
சினிமாவுக்காக நடிகைகள் கல்யாணம் பண்ணாமல் இருக்க வேண்டுமா?
மற்றவர்கள் எப்படியோ… எனக்கு திருமணத்தில் நம்பிக்கை உண்டு. திருமணம் தான் ஒரு மனிதனின் வாழ்க்கையை முழுமையாக்குகிறது. திருமணம் சிலருக்கு சீக்கிரம் நடக்கலாம். சிலருக்கு தாமதமாக நடக்கலாம். ஆனால் வாழ்க்கைத் துணை கண்டிப்பாக வேண்டும்.
நடிகைகள் திருமணத்தை தள்ளிப் போடுவது அவர்கள் சொந்த விருப்பம். பாப்புலாரிட்டியில் இருக்கும் போதே சிம்ரன், ஜோதிகா, தீபிகா படுகோன், சமந்தா போன்றவர்கள் திருமணம் செய்து கொண்டார்கள். இப்போ திருமணமான நடிகைகளுக்கும் பட வாய்ப்பு பிரகாசமா உள்ளது.
பிடித்த நடிகர்?
நான் விஜய் சாரின் தீவிர ரசிகை. ‘தெறி’, ‘மெர்சல்’, ‘சர்க்கார்’ உடபட சமீபத்திய படங்கள் அனைத்தையும் பார்த்துள்ளேன். விஜய் சார் போன்ற மாஸ் ஹீரோக்களுடன் நடிக்க வேண்டும் என்ற ஆசை என்னைப் போன்ற வளரும் நடிகைகளுக்கு இருக்கும். எனக்கும் அப்படியொரு ஆசை உண்டு.என்கிறார்.