சூர்யா நடித்துள்ள காப்பான் படத்தின் முன்னோட்ட விழாவை மிகவும் சிறப்புடன் நடத்த திட்டமிட்டிருக்கிறார்கள்.
கே.வி.ஆனந்த் இயக்கத்தில் சூர்யா மோகன்லால் ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருக்கிற இந்த படம் அரசியல் சார்ந்தும் இருக்கும்,
அகரம் நிறுவனம் சார்பில் மத்திய அரசின் புதிய கல்விக் கொள்கையை பற்றிய விவாத மேடை நடந்தது. இதில் கலந்து கொண்ட சூர்யா விளக்கமாக பேசினார். அந்த கொள்கையினால் மாணவர்களுக்கு ஏற்படும் இன்னல்கள் ,தமிழகம் பின்னுக்குத் தள்ளப்படுகிற ஆபத்து இவைகளைப் பற்றி தெளிவாக எடுத்து சொன்னார்.
தமிழகத்தில் இருக்கிற கல்வியாளர்களும் புதிய கல்விக் கொள்கையை கடுமையாக கண்டிக்கிறார்கள்.
பாஜக ஆதரவாளர்கள் மட்டுமே ஆதரவு தெரிவித்திருக் கிறார்கள்.
சூர்யாவின் கருத்துக்கு மக்கள் நீதி மய்யத் தலைவர் கமல்ஹாசன் முழு ஆதரவைத் தெரிவித்திருக்கிறார். திருமாவளவன்,இயக்குநர் ரஞ்சித் ஆகியோரும் ஆதரவு தெரிவித்திருக்கிறார்கள்.
ஆனால் இதுவரை சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் நடிகர் சூர்யாவுக்கு ஆதரவு தெரிவிக்க வில்லை.
இந்த விழா மேடையிலாவது தனது கருத்தை சொல்வாரா?