இயக்குனர் கார்த்திக் சுப்பாராஜ் இயக்கத்தில், தனுஷ் கதாநாயகனாக நடிக்கும் புதிய படத்தை ஒய்நாட் ஸ்டுடியோஸ், ரிலையன்ஸ் என்டர்டெயிண்மன்ட் நிறுவனத்துடன் இணைந்து தயாரிக்கிறது.
கேங்ஸ்டர்-திரில்லராக உருவாகும் இப்படத்தில் நாயகியாக ஐஸ்வர்யா லஷ்மி நடிக்க, இப்படம் முழுவதுமே இங்கிலாந்தில் படமாக்க முடிவு செய்யப்பட்டு இருக்கிறது.
வரும் ஆகஸ்ட் மாதத்தில் இப்படத்தின் படப்பிடிப்பு துவங்க இருக்கும் நிலையில் இதில் பங்கு பெறும் நட்சத்திரங்கள், தொழிட்நுட்ப கலைஞர்கள் குறித்த அறிவிப்பு விரைவிலேயே வெளியிடப்பட உள்ளது.
இப்படத்திற்கு சந்தோஷ் நாராயணன் இசையமைக்க, ஸ்ரேயாஸ் கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார்.