தெறி ,மெர்சல் படங்களைத் தொடர்ந்து இயக்குநர் அட்லீயுடன் விஜய் மூன்றாவது முறையாக இணைந்துள்ள
புதிய படம்,பிகில் .இதில் நயன்தாரா, நடிகர் விவேக், டேனியல் பாலாஜி, யோகி பாபு, கதிர் உள்பட பலர் நடித்து வருகின்றனர்.
இறுதிகட்டத்தில் உள்ள இப்படத்தின்பாடல் ஒன்றை ஏ.ஆர்.ரஹ்மான் இசையில் விஜய் பாடியுள்ளார்.
சிங்கப்பெண்ணே எனத் தொடங்கும் பாடல் சமூக வலைதளங்களில் ‘லீக்’காகி பரபரப்பை ஏற்படுத்தியது. இந்நிலையில் இப்படத்தின் தயாரிப்பாளர் அர்ச்சணா கல்பாத்தி, தனது டுவிட்டரில், ‘சிங்கப்பெண்ணே பாடல் வரும் 23ம் தேதி வெளியிடப்படும்.
இப் பாடல் நம் நாட்டின் ஒவ்வொரு மகள்களுக்கும் சமர்ப்பணம் ‘ என தெரிவித்துள்ளார்