இன்று (23-10-15) தமிழ்த் திரைப்பட தயாரிப்பாளர்கள் சங்கத்தின் அவசர செயற்குழுக் கூட்டம் சங்க அலுவலகத்தில் நடந்தது.அக்கூட்டத்தில் எடுக்கப்பட்ட முடிவின் படி ,தமிழ்நாடு திரைப்பட விநியோகஸ்தர்கள் சங்க கூட்டமைப்பின் சார்பில் 23-10-15 முதல் திரைப்படங்களை வெளியிடுவதில்லை என்ற முடிவை திரும்பப் பெறக்கோரி கேட்டு கொண்டதற்கு இணங்க வும்,நமது தயாரிப்பாளர்கள் பலர் விடுத்த கோரிக்கையின் அடிப்படையிலும் 23-10-15 முதல் எந்த மொழித் திரைப்படங்களையும் வெளியிடுவதில்லை என்ற முடிவை ஒத்தி வைப்பது எனத் தீர்மானிக்கப்பட்டுள்ளது.திரையுலகின் அனைத்து பிரிவினரையும் கலந்து பேசி மறு தேதி அறிவிக்கப்படும் .நமது சங்க உறுப்பினர்கள் இந்த முடிவிற்கு தங்களது மேலான ஒத்துழைப்பை அளித்திடுமாறு கேட்டுக்கொள்கிறோம்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.