கள்ளன் பெருசா காப்பான் பெருசான்னு காலம் காலமா பட்டி தொட்டியெல்லாம் பெருசுக பேசிட்டிருந்தாங்க. அது எந்த காலத்துக்கும் பொருந்தும்கிறத நம்ம பயலுக காட்டிட்டானுகள்ல ?
தர்பார் படத்தின் காட்சிகள் லீக் ஆயிடக்கூடாதுன்னு படக்குழு ரொம்பவே கட்டுப்பாடுகள் போட்டுச்சு. அதையும் மீறி அப்பப்ப படங்கள் அவுட் ஆகிட்டேதான் இருந்தது.
சூப்பர் ஸ்டார் ரஜினி போலீஸ் அதிகாரி வேஷத்தில கம்பீரமா சல்யூட் அடிச்சுக்கிட்டே நடக்கிற படத்த ஒரு கில்லாடி அவுட் ஆக்கிட்டான்.சின்ன மனக்குறை.
ரஜினிக்கு நீங்க வைக்கிறது விக் தான்,இந்த அதிகாரி வேசத்துக்காவது போலீஸ் கட் விக் வெச்சிருக்கலாமே.இன்னும் கம்பீரம் சூப்பராக இருந்திருக்கும்.
பிரமாண்டமாக படம் எடுக்கிறவங்களுக்கு இது கூட தெரியாதா?
இல்ல எனக்கு இந்த பரட்டை விக் தான் வேணும்னு சூப்பர் ஸ்டார் அடம் பிடிச்சாரா?
டைரக்டர் நோட் த பாயின்ட்!