வாழைப்பழக் கதை தெரியும்.
கரகாட்டக்காரன் படத்தில் கவுண்டமணி ஒரு ரூபா கொடுத்து 2 வாழைப்பழம் வாங்கி வரும்படி செந்திலிடம் சொல்லுவார்.
இரண்டு பழம் வாங்கிய செந்தில் ஒன்றை முழுங்கிவிட்டு இன்னொன்றை மட்டும் கொடுத்துவிட்டு வாதாடுவார்,
ஆனால் இங்கு கதையே வேற,!
பிரபல இந்தி நடிகர் ராகுல்போஸ். சண்டிகார் ஜே.டபிள்யூ மாரியாட் ஹோட்டலில் இருக்கிற ஜிம்முக்குப் போய் பயிற்சி செய்து விட்டு அங்கிருந்த கேண்டினில் 2 வாழைப்பழம் கொண்டு வரும்படி ஆர்டர் கொடுத்திருக்கிறார்,
பழம் வந்தது. “உடலுக்கு ஆரோக்கியம் “என சொல்லியவாறே சாப்பிட்டு விட்டு பில்லை பார்த்தார்.
ரூ.442.50 என பில்.
பாரதமாதா கி ஜெய் என சொல்வதைவிட வேறென்ன சொல்ல முடியும்?
எல்லோருமே சமம் என சொல்லி நாளைக்கு நம்மிடமும் இதே காசை வாங்கி விடக்கூடாது.