இயக்கம் : சந்தோஷ்குமார், கதை வசனம் : சக்திவேல், இசை:அபிஜோ,ஒளிப்பதிவு :விஜயன்.
விஜயராஜ்,தீபிகா,சாப்ளின் பாலு, ஜீவிதா,
******************
சிறு பட்ஜெட் படம். நல்ல கருத்தினை சொல்ல ஆசைப் பட்டிருக்கிறார்கள்.
சாப்ளின் பாலுவுக்கு முக்கிய வேடம். வெட்டியான் .இவருக்கு இரண்டு மகள்கள். மின்சாரம் தாக்கி ஒரு கை செயல் இழக்கிறது. இதனால் சுடுகாட்டு வேலையை மகள் தீபிகா பார்க்கிறார்.அழகான பெண். ஊர் பெரிய வீட்டுப் பையனுக்கு (விஜயகுமார் )ஆசை. நல்ல பத்திரிகையாளன். கல்யாணம் வரை வந்து நின்று விடுகிறது. மறுபடியும் கல்யாணம் நடக்கிறதா இல்லையா என்பதுதான் கதை.
இயக்குநர் சந்தோஷ்குமார் நம்பிக்கையுடன் எடுத்திருக்கிறார். ஒரு பெண் வெட்டியான் வேலை பார்க்கிறாள் என்கிற உண்மைச்சம்பவத்தை மையமாக வைத்து கதை பண்ணியிருக்கிறார்கள்..திரைப்பட விழாவுக்கு அனுப்பி இருக்கிறார்கள்.
துணை வேடங்களில் வந்து போகும் சாப்ளின் பாலுவுக்கு கிடைத்த நல்ல வாய்ப்பை பயன் படுத்தியிருக்கிறார். மகளாக நடித்திருக்கிற தீபிகாவுக்கு நல்ல வாய்ப்பு. வாய்ஸ்தான் பொருந்தவில்லை.
அடுத்து என்ன நடக்கும் என்பதை முன்னதாகவே யூகிக்கும் வகையில் திரைக்கதை அமைந்திருக்கிறது..
புதியவர்கள் ,புதிய முயற்சி.முடிவு ரசிகர்கள் கையில்.!