அன்புச் சகோதர ,
அடி வாங்கிய மனதுடன் எழுதுகிறேன். பிக்பாஸ் என்பது வீரப்பதக்கம் வழங்கும் அல்லது திறமைகளை வெளிப்படுத்தி சாதனையாளர் விருது வழங்கும் அமைப்போ,அந்தஸ்தோ இல்லாத தமிழக அவமானம்.
நம் வீட்டுப் பெண்களை தொடைகள் தெரிய ஆடைகள் அணிய விடுவோமா ,பிற ஆண்களை கட்டித் தழுவ விடுவோமா,? ஜட்டி தெரிய குட்டை ஆடைகளை அணிந்து கொண்டு வருகிற பெண்களை வீதிகளில் பார்க்க முடியுமா?
இது பொழுது போக்குத்தானே ,ரியால்டி ஷோவுக்கு கலாசார அடையாளம் தேவையில்லை என உலகநாயகன் கமல்ஹாசன் வாதாடினாலும் வாதாடுவார்.
நான்கு முறை தேசிய விருது வாங்கிய தமிழுணர்வு மிக்க இயக்குநர் நீங்கள்.
ஈழத்தமிழர்க்காக பொங்கிய கடல்.இன,மானப் போராளி .
“வேண்டுமென்றே வயிற்றில் கை வைத்து இழுத்து விட்டார் “என்று விளம்பரம் தேடி ஒரு பெண் கடுமையாக குற்றம் சாட்டியதும் நீங்கள் உடைந்து போனதை பார்க்க முடிந்தது.
“என்னிடம் கெட்ட நோக்கத்துடன்தான் சேரன் நடந்து கொண்டார்” என்று மீரா மிதுன் என்கிற அந்த மாடல் நடிகை திரும்பத் திரும்ப குற்றம் சாட்டுவதும் ,நீங்கள் ” நான் டைரக்டர் பத்துப் படம் பண்ணியவன்”என்று அங்கு உங்கள் அடையாளங்களை சொல்வதும் பிக்பாஸின் ஸ்கிரிப்டில் இருக்கலாம்.
ஆனால் அந்த சீன் உங்களின் கற்பினை காவு வாங்கி விடும் என்பதை எப்படி உணராமல் இருந்தீர்கள்?
பெற்ற பெண்கள் மீது சத்தியம் பண்ணும் அளவுக்கு அங்கு என்ன நடந்து விட்டது? தொப்புளில் பம்பரம் விட்ட சினிமா உலகம் சார்ந்த நடிகைக்கு வயிற்றில் கை வைத்து இழுத்து விட்டது குற்றமா? முதியவர் மோகன்வைத்யா முத்தம் கொடுத்தாரே. அப்போது ஏன் பொங்கவில்லை?
நான்கு பெண்கள் சேர்ந்து இழுபறியாக இருந்த நிலையில் ஒரு பெண்ணை வெளியே இழுப்பதற்கு இடுப்பை பிடித்து வளைத்து இருக்க வேண்டும் என அந்த மாதரசி நினைத்தாரோ என்னவோ?
மான்களும் குயில்களும் நிறைந்த மாந்தோப்பும் தென்னந்தோப்பும் பழகிப்போன இயக்குநர் சேரனுக்கு இது தேவையா?
வெளியேறிவிடுங்கள்.
அன்புடன்,
தேவிமணி,